பட்டுக்கோட்டையில் போட்டியிடும் கொலை கைதி
திருச்சி :
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுதலை ஆனவரும், தற்போதுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவருமான தெளபீக் என்பவர்பட்டுக்கோட்டை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
கொலை, கொள்ளை, அடிதடி, கட்டப் பஞ்சாயத்து வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவது என்பது உ.பி., பீகார் போன்றமாநிலங்களில் வெகு சாதாரணமான விஷயம்.அந்த டிரண்ட் இப்போது தமிழகத்திலும் பரவத் தொடங்கியுள்ளது. கொலை வழக்கில்விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவர், சட்டசபைத் தேர்தலில்போட்டியிடுகிறார். அவரது பெயர் தெளபீக்.
இவர் பட்டுக்கோட்டை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யானைச்சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் தெளபீக். ஆட்டோ டிரைவர்ஒருவரைக் கொலை செய்த வழக்கில் விசாரணைக் கைதியாக திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்னொரு கொலை முயற்சி தொடர்பாகவும் இவர் மீது வழக்கு உள்ளது. மும்பைதொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்டார்.
இத்தனை குற்றப் பின்னணி கொண்ட தெளபீக் நீதிமன்றத்தின் அனுமதியுடன்சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது வேட்பு மனுவை தேர்தல்ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரங்கராஜனும், மதிமுக சார்பில் விஸ்வநாதனும்,தேமுதிக சார்பில் செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 7 பேர் களத்தில்உள்ளனர்.
தெளபீக் தொடர்ந்து சிறையில் இருப்பதால் அவரால் பிரசாரத்திற்கு வரமுடியவில்லை. இருப்பினும் அவரது பெற்றோர் ஷாகுல் ஹமீது, சல்மா ஆகியோர்தங்களது மகனுக்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களோடு தெளபீக்கின் உறவினர்களும் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டையாடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications