உளைச்சலிலிருந்து மீண்ட பி.சி.ராமசாமி!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் கல்தாகொடுக்கப்பட்ட இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, அந்தஅதிர்ச்சியிலிருந்தும், அதிருப்தியிலிருந்தும் மீண்டு அதிமுக வேட்பாளர்நமச்சிவாயததிற்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

மொடக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர்அமைச்சர் பி.சி.ராமசாமி. பெயர் அறிவிக்கப்பட்டவுடன் தீவிரப் பிரசாரத்தில்இறங்கிய ராமசாமி, வேட்பு மனுவையும் தாக்கல் செய்து விட்டார்.

ஆனால் ராமசாமியின் தங்கை மகன் கோவில் தூண் திருட்டு வழக்கில் மாட்டவே,அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக கொளுத்திப் போட்டார்செங்கோட்டையன்.

அறிநிலையத்துறை அமைச்சரின் உறவினரே கோவில் தூணைத் திருடினார் என திமுககூட்டணி பிரச்சாரம் செய்தால் தோல்வி நிச்சயம் என்பதால் ராமசாமி நீக்கப்பட்டுபுதிய வேட்பாளராக நமச்சிவாயம் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராமசாமிஇதனால் அதிர்ச்சி அடைந்தார்.

தேர்தல் பணிகளை நிறுத்திய அவர் வீட்டோடு முடங்கி விட்டார்.

அம்மாவுக்காக எத்தனை கோவில்களில் எத்தனை யாகங்கள், பூஜைகள் நடத்தினேன்.இவை தவிர அம்மா உத்தரவுப்படி கும்பாபிஷேகங்களை நடத்தினேன். இப்படிசெங்கோட்டையன் பேச்சைக் கேட்டு என்னைத் தூக்கிவிட்டாரே என புலம்பி வந்தார்.

மன உளைச்சல் ஏற்பட்டதால் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்த அவரைஜெயலலிதா, மொடக்குறிச்சி தொகுதியில் வந்து பிரசாரம் செய்து விட்டுப்போகும்போது ஆறுதல் கூறிவிட்டுப் போனாராம்.

இதையடுத்து புது உற்சாகம் பெற்று தனது அதிருப்தி நிலையிலிருந்து வெளியேவந்துள்ளார் ராமசாமி.

இப்போது நமச்சிவாயத்தின் வெற்றிக்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.சமீபத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இத்தொகுதியில் வந்து பேசினார்.அப்போது ராமசாமி செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்த்து வைகோ மனம் மகிழ்ந்துபோய் வாய் விட்டுப் பாராட்டினாராம்.

பிசிஆருக்கு ஆப்பு வைப்பதில் செங்ஸ்சுக்கு என்ன சந்தோஷம் என்கிறீர்களா?.அதிமுக வென்றால் இந்த மாவட்டத்தில் அமைச்சர் பதவிக்குப் போட்டியிட தன்னைத்தவிர வேறு மூத்தவர் யாரும் இருக்கக் கூடாது என்ற அல்ப ஆசை தான் காரணமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+