திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி: லயோலா கருத்துக் கணிப்பு
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று லயோலாகல்லூரி நடத்தியுள்ள புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை லயோலா கல்லூரி கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகிறது.முதலில் அதிமுகவுக்கே மக்களிடையே பெரும் ஆதரவு இருந்தது இதன் கருத்துக்கணிப்பில் உறுதியானது. ஆனால், பிரச்சாரம் தொடங்கிய பின்னர் நடத்தப்பட்டகருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இந் நிலையில் சமீபத்தில் புதிய கருத்துக் கணிப்பை ஒன்றை நடத்தியது லயோலாகல்லூரி. அதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் இன்று வெளியிட்டார்.
அதன்படி திமுக கூட்டணிக்கு கடந்த முறையை விட இம்முறை ஆதரவுஅதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த முறை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்போது திமுக கூட்டணிக்கு 44.5சதவீத ஆதரவு கிடைத்திருந்தது. இந்த முறை அது அதிகரித்து 45.1சதவீதமாகியுள்ளது.
அதே நேரத்தில் அதிமுகவுக்கு கடந்த முறை 40.1 சதவீத ஆதரவு இருந்தது. அதுஇப்போது 39.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
திமுக, அதிமுக அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாச சதவீதம் 6.4 ஆகஉள்ளது.
பெண்கள் மத்தியில் திமுகவுக்கு கணிசமான அளவுக்கு ஆதரவு அதிகரித்திருப்பதும்இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது என்று ராஜநாயகம் தெரிவித்தார்.
நிலைமை திமுகவுக்கு சாதகமாகத் திரும்ப அதன் தேர்தல் அறிக்கையே முக்கியகாரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications