திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்: நக்கீரன்அதிமுகவுக்கே வெற்றி: குமுதம் ரிப்போர்டர்
சென்னை:
நக்கீரன் வார இதழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனதெரியவந்துள்ளது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள 160 இடங்களுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுககூட்டணி 139 இடங்களில் வெல்லும் என்று தெரிய வந்துள்ளது.
அந்த இதழ் தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. கடந்தமக்களவைத் தேர்தலின்போது 40 இடங்களிலும் திமுக கூட்டணியே வெல்லும் என அடித்துக் கூறிய சர்வேநக்கீரனுடையது.இந் நிலையில் இப்போது தனது கருத்துக் கணிப்பு முடிவுகளை 3 பாகமாக நக்கீரன் வெளியிட்டு வருகிறது.
முதல் கட்டமாக வெளியிட்டுள்ள 80 தொகுதிகளுக்கான முடிவுகளில் 71ல் திமுக கூட்டணியும் 8ல் அதிமுககூட்டணியும் ஒரு இடத்தில் தேமுதிகவும் வெல்லும் என்று நக்கீரன் நடத்திய விரிவான கருத்துக் கணிப்பில்கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக அந்த இதழ் வெளியிட்டுள்ள 80 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பில் 68 இடங்களில்திமுக கூட்டணியும் 11 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெரும் என்று தெரிய வந்துள்ளது.
ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் இரண்டு கட்டமாக வெளியிடப்பட்ட 160 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பில் 139 இடங்களில்திமுக கூட்டணி வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு 19 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விருத்தாசலத்தில் விஜய்காந்த் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 74 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகளை நக்கீரன் அடுத்த இரு நாட்களில்வெளியிடவுள்ளது.
அதிமுக வெல்லும்- குமுதம் ரிப்போர்டர்:
இதற்கிடையே குமுதம் ரிப்போர்டர் வார இதழ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கேவெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு 126 இடங்களிலும் திமுக கூட்டணிக்கு 103 இடங்களிலும் வெற்றி கிடைக்கும் என்றுகூறப்பட்டுள்ளது.
5 தொகுதிகள் இழுபறியாக உள்ளதாகவும் குமுதம் ரிப்போர்டர் தெரிவித்துள்ளது.
அதிமுக வெல்லும்: சட்ட கல்லூரி கணிப்பு
அதே போல தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர்.
அதில், அதிமுக கூட்டணிக்கு 56.5 சதவீத மக்களும் திமுக கூட்டணிக்கு 38.1 சதவீத்ததினரும்வாக்களிக்கவுள்ளதாகத் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
விஜய்காந்த் கட்சிக்கு 4.3 சதவீத ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக அணிக்கு 172 தொகுதிகளும் திமுகவுக்கு 62 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் சட்டக் கல்லூரிமாணவர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
திமுக வெல்லும்: இன்னொரு கருத்துக் கணிப்பு
இந் நிலையில் குமரி கிருஸ்துவ ஒன்றிணைப்பு இயக்கம், சென்னை சட்டக் கல்வி மற்றும் உதவி நிறுவனம்,டெல்லி வில்லியம் கேரி கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் நடத்தியகருத்துக் கணில்ல் திமுகவுக்கு 47.9 சதவீதமும் அதிமுகவுக்கு 39.9 சதவீதமும் ஆதரவு இருப்பதாகத்தெரியவந்துள்ளது.
இதனால் திமுக கூட்டணியே அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications