மயங்கி விழுந்தார் கார்த்திக்!
திருநெல்வேலி:
தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் நிநகர் கார்த்திக்திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் கார்த்திக்கால் நீண்ட நேரம் வெயிலில் இருக்க முடியாது. அப்படி இருந்தால்உடனடியாக உடல் சோர்வு ஏற்பட்டு விடும்.இந் நிலையில் சட்டசபைத் தேர்தலில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். குளிர்சாதனவசதி கொண்ட கேரவன் வேன் ஒன்றும் கார்த்திக் உடன் வருகிறது.
பிரச்சாரம் செய்த பின் அந்த வேனில் போய் ஓய்வெடுக்கிறார் கார்த்திக்.
நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த கார்த்திக், ராதாபுரம் தொகுதிக்குட்பட்டகிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு பேசினார். திசையன் விளை அருகே வேனின்மீது நின்றபடியே கார்த்திக் பேசினார்.
அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு அப்படியே உட்கார்ந்தார்.
இதனால் அவருக்கு அருகில் நின்றிருந்த வேட்பாளர்
பார்வதியும், மற்றவர்களும் கார்த்திகை தாங்கிப் பிடித்தனர்.
கார்த்திக்கின் உதவியாளர் சில மாத்திரைகளை கார்த்திக்குக் கொடுத்தார். பின்னர்வேனிலிருந்து இறக்கப்பட்ட கார்த்திக், வேறு ஒரு வேன் மூலம் ராஜபாளையம்கொண்டு செல்லப்பட்டார்.
பிரசாரத்திற்கு வருவதற்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்ததாகவும், தொடர்ந்துபிரசாரம் செய்து வந்ததால் மயக்கம் ஏற்பட்டு விட்டதாகவும் கட்சி நிர்வாகிகள்தெரிவித்தனர்.
கார்த்திக் மயக்கம் போட்டு விழுந்ததால் அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு விட்டன.












Click it and Unblock the Notifications