தபால் ஓட்டுக்களை வாங்க அதிகாரிகள் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுக்களை வாங்கதேர்தல் அதிகாரிகள் மறுப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் கூறியுள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தங்களதுவாக்குகளை செலுத்த தபால் ஓட்டு முறை அமலில் உள்ளது.

தற்போது பெரும்பாலான அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்அதிமுகவுக்கு எதிராக இருப்பதால் இந்த முறை தபால் ஓட்டு விஷயத்தில் அவர்கள்சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நேற்றுதான் தபால் ஓட்டுக்களைசெலுத்துவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்பட்டோர் நலத்துறை அலுவலகத்திற்குஅவர்கள் சென்றபோது அங்கிருந்த அதிகாரிகள் தபால் ஓட்டுக்களைப் பெற மறுத்துவிட்டனர்.

தபால் ஓட்டுக்களை வழங்குவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது.எனவே இப்போது இவற்றைப் பெற முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான் நிலவுவதாக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் புலம்புகின்றனர். அரசின் உத்தரவுப்படியே அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+