வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம்-ப.சி புகார்
சிவகங்கை:
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க சில பணதலைகள் (அதிமுகவினர்) முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதை ஜனநாயக முற்போக்குக்கூட்டணி செயல்வீரர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கையில் இன்று ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டசபைத் தொகுதியிலிருந்துஎனக்கு வரும் சில தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. அத்தொகுதிவாக்காளர்களுக்கு குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் (அதிமுக) பணம்கொடுத்து விலைக்கு வாங்கி வருவதாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினர்எனக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். கடந்த ஒருமாதமாக நாம் கடுமையாக உழைத்து சேகரித்து வைத்துள்ள வாக்குகளை, சில பணத்தலைகள் பணம் கொடுத்து சுரண்டிச் செல்ல ஜனநாயக முற்போக்குக் கூட்டணிசெயல்வீரர்கள் அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க யார் முயற்சி செய்தாலும் அதைத் தடுத்து நறுத்தவேண்டும். இந்த விஷயத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் அனைத்துக்கட்சி செயல்வீரர்களும் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நமது உழைப்பு அத்தனையும் வீணாகி விடும் என்றார் சிதம்பரம்.
இதே போல தமிழகம் முழுவதுமே வாக்காளர்களுக்கு பணம் தரும் வேலைகளில் அதிமுகவினர்ஈடுபட்டுள்ளதாக புகார்கள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications