வீரப்பன் போஸ்டர்- ஆணையத்தில் புகார்
பெண்ணாகரம்:
பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்குஆதரவு கேட்டு வீரப்பனின் படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறித்துதேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தர்மபுரி மாவட்டம்பெண்ணாகரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவருக்குபாமகவினர் மறைமுக ஆதரவு தருகின்றனர்.முத்துலட்சுமி மலை கிராமங்கள் அனைத்திலும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்குசேகரித்தார். அவருடன் இரு மகள்களும் கூடவே சென்று பிரசாரம் மேற்கொண்டனர்.இந்த நிலையில், வீரப்பன் படத்துடன் கூடிய போஸ்டர்கள் தொகுதி முழுவதும்ஒட்டப்பட்டுள்ளது. அதில் கும்பிட்டபடி முத்துலட்சுமி உள்ளார்.
முத்துலட்சுமியின் ஆதரவாளர்களால் அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டுஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் சிலஅமைப்புகள் புகார் கூறியுள்ளன.
இதுமாதிரியான போஸ்டர்களால் தேவையற்ற சர்ச்சைகள், பிரச்சினைகள் உருவாகும்.எனவே இந்த போஸ்டர்களுக்குத் தடை விதித்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்என்று கோரி அவை தேர்தல் ஆணையத்திற்குத் தந்தி அனுப்பியுள்ளன.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயராம் கூறுகையில், வீரப்பன்படத்துடன் கூடிய போஸ்டர்களை போலீஸார் அப்புறப்படுத்த நடவடிக்கைஎடுப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications