பட்டியலில் பேர் இல்லை-300 பேர் போராட்டம்
சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் போட்டியிடும் ஆயிரம் விளக்குதொகுதியில் 300 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால்அவர்கள் ஒட்டுப் போட அனுமதி மறுக்கப்பட்டனர். இதனால் அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் குதித்தனர்.
தியாகராய நகர் தெற்கு போக் சாலை, சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த 300 பேர்டக்கர் பாபா பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு இன்றுசென்றனர்.அனைவரிடமும் புகைப்பட அடையாள அட்டை இருந்தது. இருப்பினும் அவர்களதுபெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். தங்களை ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள்வாதிட்டனர். இருப்பினும் அவர்களை தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப் போடஅனுமதிக்கவில்லை.
இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய வாக்காளர்கள் வெங்கட் நாராயணா சாலையில்அமந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு விரைந்துசென்று கலைந்து போகுமாறு கூறினர். இதையடுத்து அனைவரும் சாலையோரம் கூடிநின்று கொண்டிருந்தனர்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் போட்டியிடும் துறைமுகம் தொகுதியில்காலையில் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. வாக்காளர்கள் கூட்டம் இல்லாததால்ஒவ்வொருவராக வந்து வாக்களித்துச் சென்றனர்.
வாக்களிக்காமல் முரண்டு பிடித்த பெண்:
கோவை மேற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிக்கு வந்த பெண் ஒருவர்யாருக்கும் வாக்களிக்க மாட்டேன் என்று கூறி முரண்டு பிடித்ததால் பரபரப்புஏற்பட்டது.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு இன்று காலை ஒரு பெண் வந்தார். வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அவர் நான் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பவில்லை. எனவேயாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று கூறும் பொத்தான் எங்கே உள்ளதுஎன்று கேட்டு முரண்டு பிடித்தார்.
அதற்கு தேர்தல் அதிகாரிகள், ஓட்டுப் போட விருப்பம் இல்லாவிட்டால் இங்கு ஏன்வந்தீர்கள். வாக்குப் பதிவு இயந்திரத்தில் அதுபோன்ற வசதி இல்லை என்றனர்.
இதையடுத்து கோபமடைந்த அந்தப் பெண் ஆங்கிலத்தில் சரமாரியாக வாதாடியபடிநின்றார்.
இதையடுத்து ஒரு விண்ணப்ப பாரத்தை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தஅதிகாரிகள் இதை நிரப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த பாரத்தில் தான் வாக்குச் சாவடிக்கு வந்ததாக நிரப்பிக்கொடுத்து விட்டு அந்தப் பெண் சென்றார். இதன் காரணமாக சில நிமிடங்கள் வாக்குச்சாவடியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications