தமிழகத்தில் தேர்தல் முடிந்தது-65% வாக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அடுத்து ஆட்சி அமைக்கப் போகும் கட்சியை முடிவு செய்து விட்டு தமிழகவாக்காளர்கள் ஓய்ந்துள்ளனர். இன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் 65 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல்நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்குமுடிவடைந்தது.

பல இடங்களில் காலை 6 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு வந்துவிட்ட மக்கள் நீண்டவரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி, திமுக தலைவர் கருணாநிதிபோட்டியிடும் சேப்பாக்கம், ஸ்டாலின் போட்டியிடும் ஆயிரம் விளக்கு, நடிகர்விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவுமிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாகவரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஊனமுற்ற வாக்காளர்களுக்கு வசதியாக சாய்வான தளங்கள் அமைக்கப்பட்டன.மேலும், வெயில் கொடுமையிலிருந்து வாக்காளர்களைக் காப்பதற்காக வாக்குச்சாவடிகளுக்கு முன் பந்தல், ஷாமியானா உள்ளிட்டவையும் போடப்பட்டிருந்தன.

பொதுவாக அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. ஆண்டிப்பட்டி தொகுதியில்,திமுக வேட்பாளர் சீமானுடன் அதிமுக பூத் ஏஜென்டுகளுடன் தகராறு செய்ததும்,மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சீமான் சேதப்படுத்தியதும் தான் முக்கியமானஅசம்பாவித சம்பவமாகும்.

இத் தேர்தலில் மொத்தம் 4.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.மொத்தம் 2,586 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 1,222 பேர்சுயேச்சைகள், 160 பேர் பெண்கள்.

அதிகபட்சமாக ஆயிரம் விளக்குத் தொகுதியில், 26 வேட்பாளர்களும், குறைந்தஅளவாக ஒரத்தநாடு தொகுதியில் 4 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவையொட்டி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. 20,000 துணைராணுவப் படையினர், 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் பணிகளில் 3 லட்சம் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.மொத்தம் 51,543 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்களிப்போருக்கு இடது கை ஆள்காட்டி நகத்தின் மேல் பகுதியிலிருந்து நீளமாககோடு போல அழியாத மை வைக்கப்பட்டது.

தமிழகத்திலேயே கோவை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர் ஆகியமாவட்டங்களில்தான் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. இதேபோலகிராமப்புற வாக்காளர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தினர்.

வாக்களிக்க வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை கண்டிப்பாக உடன்எடுத்துச் செல்ல வேண்டும். அது இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களான 13ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம்அறிவுறுத்தியிருந்தது.

வாக்குச் சாவடிகளுக்கு 100 மீட்டர் தொலைவிலேயே அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டனர்.மேலும் சாவடிகளுக்கு 200 மீட்டர் தொலைவுக்கு அருகே வாகனங்கள் வரவும் தடை விதிக்கப்பட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியிலும், இந்திய கம்யூனிஸ்ட்முன்னாள் செயலாளர் நல்லகண்ணு, தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோர்தி.நகரிலும்,

பாஜக அகில இந்திய துணைத் தலைவர் இல.கணேசன் தி.நகர் இந்தி பிரசாரசபாவிலும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆழ்வார்ப்பேட்டையிலும், காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி மயிலாப்பூரிலும் வாக்களித்தனர்.

பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் ரகசிய கேமராக்கள் மறைவாக வைக்கப்பட்டு வாக்குப் பதிவுகண்காணிக்கப்பட்டது.

சென்னையில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார் தவிர மத்தியப் படையினரும், 165 நடமாடும்காவல் படைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

உதவி கமிஷ்னர்கள் தலைமையிலான ஸ்டிரைகிங் போர்ஸ், இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான ஸ்டிரைகிங்போர்ஸ், யெல்லோ பிரிகேட், புளு பிரிகேட் என பல்வேறு பிரிவு அதிரடிப் படைகளும் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டன.

தமிழகத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தவிர ஆயுதம் தாங்கிய மத்தியப்படை வீரர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பாண்டிச்சேரியிலும்:

புதுவையிலும் வாக்குப் பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 27 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடந்தது.

அங்கு 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

11ம் தேதி வாக்கு எண்ணிக்கை:

தமிழக, பாண்டிச்சேரி தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 11ம் தேதி நடக்கிறது. இன்று வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் பலத்தபாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் அதிகபட்ச பாதுகாப்புகொடுக்கப்படவுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவு பகலாக பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அங்கு 11ம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடக்கும். பிற்பகலுக்குள்ளேயே எல்லா முடிவுகள்வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+