புதிய குழு-காவிரி நடுவர் மன்ற உத்தரவு வாபஸ்
டெல்லி:
காவிரிப் பாசன மாநிலங்களில் உள்ள நலங்கள், அதற்குத் தேவையான தண்ணீர்உள்ளிட்டவை குறித்து ஆராய புதிய நிபுணர் குழுவை அமைக்குமாறு பிறப்பித்தஉத்தரவை காவிரி நடுவர் மன்றம் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர்ப் பங்கீட்டுப்பிரச்சினை தொடர்பாக விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடுவர்மன்றம் தனது விசாரணையை முடித்து விட்டது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்றுதமிழகம், கர்நிாடகம், கேரளம் மற்றும் புதுவை மாநிலங்களில் எதிர்பார்ப்புநிலவியது.ஆனால் திடீரென கடந்த மாதம் 21ம் தேதி புதிய உத்தரவு ஒன்றை காவிரி நடுவர்மன்றம் பிறப்பித்தது. அதில் நான்கு மாநிலங்களின் சாகுபடி முறை, விளைநிலங்களின் அளவு, அதற்குத் தேவையான தண்ணீர்த் தேவை ஆகியவை குறித்துஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றுதெரிவிக்கப்பட்டிருந்தது.
நடுவர் மன்றத்தின் மூன்று உறுப்பினர்களில் தலைவர் தவிர மற்ற இருஉறுப்பினர்களும் இவ்வாறு கூறியிருந்தனர். இந்த உத்தரவுக்கு தலைவரான சிங் கடும்எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
நடுவர் மன்றத்தின் இந்த புதிய உத்தரவுக்கு நான்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்புகிளம்பியது. பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்று தமிழக அரசியல்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந் நிலையில், இன்று நடுவர் மன்றம் கூடி நான்கு மாநில அரசுகளும் அனுப்பியிருந்தஆட்சேப விளக்கத்தை பரிசீலனை செய்தது. நான்கு மாநிலங்களும் ஒருமித்த குரலில்எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவை திரும்பப் பெறமுடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications