திமுகவா? அதிமுகவா?: பிரியாணி பந்தயம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மாவட்டம் ஆனைக்கட்டியைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தசெங்கல் சூளை அதிபர்கள் கட்டியுள்ள தேர்தல் பந்தயத்தால் அப் பகுதியேபரபரப்பில் மூழ்கியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் டிவை இதுவரை இல்லாத அளவுக்கு நாடே பரபரப்புடன்எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. அதை விட படு ஹாட்டான ஒரு தேர்தல் பந்தயம்கோவை மாவட்டத்தைக் கலக்கியுள்ளது.

துடியலூர் அருகே உள்ள ஆனைக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் திமுகவைச் சேர்ந்தமுருகேசன். செங்கல் சூளை அதிபர். அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு சூளைஅதிபர் குமார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.

இருவரும் ஒரு பந்தயம் கட்டியுள்ளனர். திமுக ஆட்சி அமைக்கும் என முருகேசனும்,அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்று குமாரும் கூறினர். என்ன பந்தயம் என்றுஇருவரும் பேசினர்.

அப்போது திமுக ஜெயித்து ஆட்சி அமைத்தால் நான் 5,000 பேருக்கு பிரியாணிசமைத்து விருந்து வைப்பேன் என்று கூறினார் முருகேசன்.

நான் மட்டும் இளைத்தவனா, அதிக ஜெயித்து ஆட்சியில் அமர்ந்தால் நானும் 5,000பேருக்கு பிரியாணி படைக்கிறேன் என்று பந்தயம் கட்டினார் குமார்.

இவர்களது பந்தயத்தால் ஆனைக்கட்டி கிராமம் பெரும் பரபரப்பில் மூழ்கியிருந்தார்.யார் ஜெயித்தாலும், நமக்கு பிரியாணி நிச்சயம் என்று ஆனைக்கட்டி பகுதியினர்இப்போதே வயிற்றைத் தடவிக் கொடுக்கத் தொடங்கியுள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+