மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று மிகக்கோலாகலமாக நடந்தது.

காலை 5.30 மணியளவில் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பிரியாவிடையும்கோவிலில் இருந்து பல்லக்கில் தேரடிக்குச் சென்று எழுந்தருளினர். பெரிய தேரில்சுந்தரேஸ்வரரும் சிறிய தேறில் அம்மனும் எழுந்தருளி கூடியிருந்த ஆயிரக்கணக்கானபக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதையடுத்து தேரடிக் கருப்பன், விநாயகர் பெருமானுக்கு சிறப்புப் பூஜைகளும்தீபாராதனைகளும் நடந்தன. பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, காலை 6மணிக்கு தோரோட்டம் நடந்தது.

நான்கு மாசி வீதிகளிலும் தேர்கள் வலம் வந்தன. தேர்களுக்கு முன் 2 யானைகளும்ஒட்டங்களும் சென்றன. விநாயகர், முருகன், சண்டீஸ்வரர் ஆகியோர் தனித் தனிசப்பரங்களில் தேர்களுடன் வந்தனர்.

விளக்குத் தூண் தேரடிப் பகுதியில் இருந்து புறப்பட்ட தேர்கள் தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, கிழக்கு மாசி வீதிகளில் பவனி வந்தன.

கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்:

இந்த மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்சமான 13ம் தேதி காலை வைகை ஆற்றில்தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

புதுக்கோட்டை-தேர் ஏறி இருவர் பலி:

இதற்கிடையே புதுக்கோட்டையில் இலுப்பூர் கிராமத்தில் பொன்வசிநாதர் கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி இன்றப தேரோட்டம் நடந்தது.

அப்போது இளைஞர் ஒருவர் தேரின் சக்கரத்தின் அடியில் சிக்கினர். அவரைக் நாச்சியப்பன் (45) என்பவர் காப்பாற்ற முயன்றபோது தேர் சக்கரம் அவர்மீதும் ஏறியது. அதில் நாச்சியப்பன் அந்த இடத்திலேயே பலியானார்.

படுகாயமடைந்த இளைஞர் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு டாக்டர் யாரும் இல்லை. இதனால் சிகிச்சைகிடைக்காமல் அவரும் இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+