சிவனாண்டி மீது சிபிஐயில் திடுக் புகார்:டெல்லி விரைந்தார் உள்துறை செயலாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாஜி உளவுத்துறை டிஐஜி சிவனாண்டியின் பணிக்கால ரகசிய அறிக்கைகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி சிபிஐயிடம் சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர் வத்தன் செட்டியார் என்பவர் புகார் கொடுத்தார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருப்பவர் வத்தன் செட்டியார். இவர் போலிஎப்.ஐ.ஆர். வழக்கு மற்றும் போலி இன்சூரன்ஸ் விவகாரம் ஆகியவற்றில் போலீசார்மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில்மனுதாரர் சார்பாக ஆஜராகியவர்.

அப்போது தன்னை சிவனாண்டி மிரட்டியதாக பரபரப்பு புகாரைத் தெரிவித்தார்.

சமீபத்தில் சிவனாண்டிக்கு கொடுக்கப்பட்ட சீனியாரிட்டியை சென்னை மத்திய நிர்வாகதீர்ப்பாயம் ரத்து செய்தது. மேலும் அவரை மத்திய ஐ.பி.எஸ். அதிகாரிகள்பட்டியலிலிருந்து நீக்கும்படியும் உத்தரவிட்டது.

பதவி உயர்வு பெறுவதற்காக கடந்த 1995ம் ஆண்டு பட்டியலில் இருந்த சிவனாண்டி1994ம் ஆண்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய பதவி உயர்வு கமிட்டியிடம் சிவனாண்டி தொடர்பான கூடுதல்ரகசிய அறிக்கை கடந்த 1999ம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சிவனாண்டிக்கு சீனியாரிட்டி கொடுக்கப்பட்டிருப்பதாக மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் கூடுதல் ரகசியஅறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. இதை தீர்ப்பாயம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந் நிலையில் வழக்கறிஞர் வத்தன் செட்டியார் சிபிஐயிடம் ஒரு மனுவைக்கொடுத்துள்ளார். அதில், தமிழக அரசு சார்பில் சிவனாண்டி குறித்த கூடுதல் ரகசியஅறிக்கை அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணம் அனுப்பிய சிவணான்டி?:

இதில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ள பதில்முரண்படுகிறது. எனவே தமிழக அரசுக்குத் தெரியாமல் சிவனாண்டி போலியானரகசிய அறிக்கையை அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இல்லாவிட்டால் சிவானண்டியைக் காக்க தமிழக அரசு பொய் சொல்லியிருக்கவேண்டும்.

எனவே இதில் உண்மை என்ன என்பதை அறிய சிவானண்டி தொடர்பான ரகசியஅறிக்கையை ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று செட்டியார்கூறியுள்ளார்.

பவன் ரெய்னா திடீர் டெல்லி பயணம்:

இந் நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா திடீரென டெல்லிபுறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து நாளை முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா திடீர் என டெல்லிக்கு சென்றுள்ளார்.அவர் எதற்காகச் சென்றார் என்று தெரியவில்லை.

ஆனால், சிவனாண்டி விவகாரம் தொடர்பாக அவர் டெல்லிக்கு சென்றிருக்கலாம்எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+