திமுக தொண்டர் மீது கொலை வெறி தாக்குதல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் அதிமுகவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலால் திமுகதொண்டர் கடுமையாக தாக்கப்பட்டார்.
உப்பளம் தொகுதியில் திமுக சார்பில் ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார். அவரைஎதிர்த்து மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் போட்டியிடுகிறார். ஆறுமுகத்திற்கேவெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தொகுதியில் பேச்சு நிலவி வருகிறது.இதனால் அதிமுக தரப்பு ஆத்திரமடைந்தது. ஆறுமுகத்திற்காக தீவிரப் பிரசாரம் செய்தரமேஷ் என்ற திமுக தொண்டரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்து நேற்று இரவுஅக்கும்பல் ரமேஷ் வீட்டுக்கு சென்றது.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரமேஷை எழுப்பிய அக்கும்பல் அரிவாளால்சரமாரியாகத் தாக்கியது. பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட ரமேஷ் நிலை குலைந்துரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
தாக்குதலை மேற்கொண்ட கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியது.
ரமேஷை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.ரமேஷ் தாக்கப்பட்ட தகவல் பரவியதும் உப்பளம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமான பேர் திரண்டனர். இதைத் தொடர்ந்து அங்குபெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமைதியை ஏற்படுத்த திமுக வேட்பாளர் ஆறுமுகம், அதிமுக வேட்பாளர்அன்பழகன் ஆகியோருடன் உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி இரு கட்சித்தொண்டர்களையும் சமாதானப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
பிரெஞ்சுப் பெண் படுகொலை
இதற்கிடையே பாண்டிச்சேரியில் 55 வயது பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி படுகொலைசெய்யப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பிலோமினா. 55 வயதாகும் பிலோமினா தனது கணவர்பெனோவா அகஸ்டினுடன் பாண்டிச்சேரியில் வசித்து வந்தார். இவர்களதுகுழந்தைகள், உறவினர்கள் பிரான்ஸில் உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பசுமதா என்ற நபரை வீட்டு வேலைகளைப்பார்க்கவும், கார் ஓட்டுனராகவும் பிலோமினா தம்பதியினர் வேலைக்குவைத்திருந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த பசுமதாவை, சிலபிரச்சினைகள் காரணமாக சில காலத்திற்கு முன்பு வேலையை விட்டு நீக்கி விட்டார்பிலோமினா.
தன்னை மீண்டும் வேலையில் சேர்க்குமாறு பெனோவாவிடம் பசுமதா கெஞ்சினார்.ஆனால் அதற்கு பெனோவா உடன்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பசுமதா, நேற்று இரவு பிலோமினா வீட்டுக்கு வந்தார்.கதவைத் திறந்து பிலோமினா யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தபோது,பிலோமினாவின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு ஓடினார் பசுமதா.
ரத்த வெள்ளத்தில் மிதந்த பிலோமினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். பிலோமினா கொல்லப்பட்ட தகவல் அறிந்துதம் போலீஸார் விரைந்து வந்துஉடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பசுமதாவை போலீஸார்தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications