தியாகய்யரின் வீட்டை இடிக்க நீதிமன்றம் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவையாறில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் வீட்டைஇடிக்க சென்னை உயர்நீதிமன்றம தடை விதித்துள்ளது.
சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவரான தியாகய்யர் என்றதியாகராஜர் வாழ்ந்த இல்லம் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ளது.இந்த வீட்டை இடித்து விட்டு நவீன கட்டடமாக மாற்ற தியாக பிரம்ம மகோத்சவ சபாமுடிவு செய்தது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த திவாகர் என்பவர்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தியாகராஜர் வாழ்ந்தஇல்லத்தை மத்திய அரசின் கலாச்சாரத் துறைகையகப்படுத்த வேண்டும். இந்த வீட்டை அருங்காட்சியகமாக அல்லதுநினைவிடமாக மாற்றி இசைப் பிரியர்களுக்கு பலன் அளிக்கும் வகையிலான இடமாகமாற்ற வேண்டும்.
இந்த வீட்டை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை பரிசீலித்த விடுமுறை கால நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஜோதிமணி ஆகியோர்வீட்டை இடிக்க இடைக்காலத் தடை விதித்தனர்.












Click it and Unblock the Notifications