16 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பானமறு வாக்குப்பதிவு : 2 சாவடிகளில் புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 12 தொகுதிகளுக்குட்பட்ட 16 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பான மறுவாக்குப் பதிவு நடந்து வருகிறது. திருத்தணி தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதை எதிர்த்து அனைத்து வாக்காளர்களும் ஒட்டுப் போடாமல்புறக்கணிப்பு செய்துள்ளனர்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சென்னைஅண்ணா நகர் உள்ளிட்ட 12 சட்டசபைத் தொகுதிகளுக்குட்பட்ட 18 வாக்குச் சாவடிகளில்இன்று மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

திருத்தணியில் 5 வாக்குச் சாவடிகள், பாலக்கோடு தொகுதியில் 3 வாக்குச் சாவடிகள் மற்றும்அண்ணா நகர், ஸ்ரீபெரும்புதூர், முகையூர், ஆத்தூர், வேடசந்தூர், கொளத்தூர், திருவாடனை,பரமகுடி, வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியிலும் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு மறு வாக்குப் பதிவு தொடங்கியது. அனைத்துவாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஆனால், திருத்தணி தொகுதிக்குட்பட்ட 5 வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் போட ஒருவாக்காளரும் வரவில்லை. இந்த இரு வாக்குச் சாவடிகளிலும் 85 சதவீதத்திற்கும் மேலானவாக்குப்பதிவு நடந்ததால் இங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது.

மறு வாக்குப் பதிவு நடக்கும் திருத்தணி அதிகத்தூர் வாக்குச் சாவடியில்
வாக்களிக்க யாருமே வராததால் சும்மா உட்கார்ந்துள்ள தேர்தல் பணியாளர்கள்.

இந்த 5 வாக்குச் சாவடிகளில் 85 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளதால் மறு வாக்குப் பதிவுநடத்தவுள்ளோம் என அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், இதற்கு அனைத்துக் கட்சியினரும்எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த வாக்குச் சாவடிகளில் முறைகேடு ஏதுமில்லாமல் தேர்தல் நடந்தது. எனவே மறுவாக்குப்பதிவு தேவையில்லை என்றனர். ஆனால், அதை அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதை எதிர்த்து நேற்று இரவு பாமகவினர் 100 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் இந்த 5 வாக்குச் சாவடிகளில் இரண்டில் வாக்காளர்கள் இன்று மறு வாக்குப்பதிவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர்.

அதிகாரிகளும், போலீஸாரும் சமாதானப்படுத்தியும் வாக்காளர்கள் வாக்களிக்க முன்வரவில்லை. இதனால் இங்கு இன்னும் ஒரு ஓட்டு கூட பதிவாகாவில்லை.

80 முதல் 85 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவானால் அங்கு மறுவாக்குப் பதிவு நடத்துவதுஎன்று ஒரு வெட்டித்தனமான விதியை தேர்தல் கமிஷன் வைத்துள்ளது.

முன்னதாக மறு வாக்குப் பதிவு குறித்த தகவல் தண்டோரா மூலமும் மாவட்ட நிர்வாகத்தின்ஜீப்கள் மூலமும் மைக் செட்கள் மூலமும் தேர்தல் ஆணையத்தால் நேற்றும் இன்றும் அந்தவாக்குச் சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பரப்பப்பட்டது.

மாலை 5 மணிக்கு இந்த வாக்குப் பதிவு முடிவடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+