போரில் தோற்கவில்லை- வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்,
சென்னை மாகாணம் என்று இருந்து பின்னர் தமிழகமாக நமது மாநிலம் பிரிந்த பிறகுமுதல் முறையாக வலுவான ஒரு எதிர்க்கட்சியை மக்கள் சட்டசபைக்கு இப்போதுதான்அனுப்பியுள்ளனர்.அதேபோல முதல் முறையாக ஒரு கூட்டணி ஆட்சியும் இப்போதுதான்அமையவுள்ளது.
ஊடக பலம், பண பலத்தை வைத்துத்தான் திமுக கூட்டணி ஜெயித்துள்ளது. மேலும்கூட்டணி பலத்தை வைத்துத்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் 7 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியிருப்பதை கணக்கில் கொள்ளவேண்டும்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். சட்டசபையில்அதிமுகவுடன் இணைந்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
ஒரு போர்க் களத்தைத் தான் இழந்துள்ளோம்.. போரில் தோற்கவில்லை என்றார்வைகோ.












Click it and Unblock the Notifications