பாமக பயம்-விருத்தாச்சலத்தில் கடையடைப்பு

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சலம்:

நடிகர் விஜயகாந்த்தின் வெற்றியைத் தொடர்ந்து பாமகவினரால் பிரச்சினை ஏற்படும்என்று கருதி முன்னெச்சரிக்கையாக அங்கு கடைகள் அடைக்கப்பட்ட ஊரேபதட்டத்தில் காணப்படுகிறது.

வன்னியர் கோட்டைக்குள் புகுந்து கலக்கல் வெற்றியைப் பெற்றுள்ளார் பாண்டிநாட்டு கருப்புத் தங்கம் விஜயகாந்த்.

இதனால் பாமகவினர் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பிராசரத்தின்போதேவிஜயகாந்த்தை கடுமையாக எதிர்த்தவர்கள் அவர்கள். வாக்குப்பதிவு நாளன்றுதொகுதிக்குள் வந்த விஜயகாந்த்தை விரட்டி அடித்தனர்.

இந் நிலையில் விருத்தாச்சலத்தில் பாமகவை 14,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் விஜயகாந்த். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

பாமகவினர் வன்முறையில் ஈடுபடலாம் என மக்கள் அஞ்சுகிறார்கள். இதன்காரணமாக விருத்தாச்சலத்தில் நேற்று பிற்பகலே பல கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.

கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாலைக்கு மேல் இயக்கப்படவில்லை.இன்று காலை முதல் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்லும்பேருந்துகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு அனுப்பப்படுகின்றனர்.

தொடர்ந்து விருத்தாச்சலத்தில் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீஸார் அதிகஅளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+