கிலோ அரிசி ரூ. 2, விவசாயிகள் கடன் ரத்து:உத்தரவுகளில் முதல் கையெழுத்திட்டார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி தமிழகத்தில் ரேசன் கடைகளில் வரும் ஜூன் 3ம்தேதி முதல் கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கும் உத்தரவில் முதல்வர் கருணாநிதி முதல்கையெழுத்திட்டார்.

திமுக அமைச்சரவை பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்வர் கருணாநிதி 3 முக்கியஅறிவிப்புகளை வெளியிட்டார்.

கிலோ அரிசி 2 ரூபாய்:

அவர் பேசுகையில் தமிழ்ப் பெருமக்களே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைஅளித்து திமுக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. கூட்டணி சார்பாக திமகதனது தேர்தல் அறிக்கையில், பொது வினியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில்தாய்மார்களின் உள்ளத்தைக் குளிர்விக்கும் வகையில் சில்லறை விலையைக் குறைத்துகிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என உறுதி அளித்தது.

இந்த வாக்குறுதியை ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஆணையாக இந்த அரசுநிறைவேற்றும் என்று பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். இதற்குசெயல்வடிவம் கொடுக்கும் வகையில், குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் கிலோஅரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளேன்.

3.6.2006 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும். இந்த சலுகை காரணமாகஅரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஆண்டுக்கு ரூ. 550 கோடியாகும்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி:

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பாக திமுக தேர்தல் அறிக்கையில், அனைத்துவிவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனஉறுதியளித்திருந்தது. வாக்குறுதியை ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் 2வதுஆணையாக இந்த அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி அளித்திருந்தேன்.

அதன்படி விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அறவேமுழுவதுமாக தள்ளுபடி செய்து உத்தரவிடப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில்உள்ள பல லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள். அரசுக்கு ரூ. 6,866 கோடிஇழப்பு ஏற்படும். இந்த இழப்பை அரசே ஏற்கும்.

வாரம் 2 முட்டை:

சத்துணவு அருந்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 2 முட்டைகள் இனிமேல்வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். மேலும், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்விக் கண் திறந்த நாளாக கொண்டாடப்படும்என்றும் அறிவித்திருந்தேன். அதன்படி ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாள்முதல் சத்துணவில் வாரத்திற்கு 2 முட்டைகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்என்று அறிவித்தார் கருணாநிதி.

அறிவிப்புகளைத் தொடர்ந்து இதுதொடர்பான 3 கோப்புகளில் உங்கள் முன்புகையெழுத்திடுகிறேன் என்று கூறிய கருணாநிதி, நேரு விளையாட்டரங்கிலேயே பொது மக்கள்முன்னிலையில் இந்த உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

தனது தேர்தல் அறிக்கையில் இந்த உறுதிமொழிகளை திமுக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தனதுபிரச்சாரத்தின்போது, நான் முதல்வரானால் இந்த மூன்று உத்தரவுகளில் தான் முதல் கையெழுத்துப் போடுவேன்என்றும் கருணாநிதி கூறியிருந்தார். அதன்படி இன்று பதவியேற்றதும் இந்த உத்தரவுகளில் கருணாநிதிகையெழுத்திட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+