புதிய தலைமைச் செயலாளர்- திரிபாதிடிஜிபியாக முகர்ஜி நியமனம்: அலெக்சுக்கு ஆப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற சில மணி நேரங்களில் தமிழக அரசின்தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி ஆகியோர் மாற்றப்பட்டு விட்டனர்.

கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவை சனிக்கிழமை பிற்பகல்பதவியேற்றது. இதைத் தொடர்ந்து நிர்வாக அளவில் முக்கிய மாற்றங்கள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி தலைமைச் செயலாளர் நாராயணன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில்புதிய தலைமைச் செயலாளராக எல்.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்திகள்பு இவர் தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவன தலைவர் மற்றும்நிர்வாக இயக்குனர் என்ற சாதாரணமான பணியில் இருந்து வந்தார். மூத்தஅதிகாரியான இவரை அதிமுக ஒதுக்கி வைத்திருந்தது.

தற்போதைய தலைமைச் செயலாளர் நாராயணன், தமிழ்நாடு தொல்பொருள் மற்றும்வரலாற்று ஆவண காப்பகத்தின் முதன்மை ஆணையர் என்ற டப்பா பதவிக்கு தூக்கிஅடிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் மூத்த அதிமுக தலைவராகவே மாறி செயல்பட்டு வந்தவர்நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள நிலத்தை விற்றது தொடர்பான சர்ச்சையில்நாராயணனின் பெயரும் அடிபட்டது நினைவிருக்கலாம்.

திமுகவின் கடும் எதிர்ப்பையும், அது தொடர்ந்த வழக்கையும் அடுத்து இந்த நிலபேரத்தை ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அரசு ரத்து செய்ததுகுறிப்பிடத்தக்கது.

அலெக்ஸ்சுக்கும் ஆப்பு:

அதேபோல டிஜிபி அலெக்சாண்டரும் மாற்றப்பட்டு விட்டார்.

அவருக்குப் பதில் புதிய டிஜிபியாக முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போதுடெல்லியில் சிபிஐ கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

அலெக்சாண்டர் இன்னும் ஒரு வாரத்தில் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை திமுக அரசு மாற்றாது என்றுகருதப்பட்டது.

ஆனால், அவரும் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு அக் கட்சிக்கு ஆதரவாககருத்துக் கணிப்புகள் எல்லாம் வெளி வரச் செய்தார்.

இதையடுத்து அவரைத் தூக்கி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் சிறப்பு அதிகாரியாகமாற்றியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

உளவுத்துறைக்கு புதிய ஐஜி:

இதேபோல செயலாக்கப் பிரிவு ஐஜியாக இருந்து வந்த காந்திராஜன் புதியஉளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பதவியில் இருந்த சஞ்சீவ் குமார் மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் உளவுத்துறையின் புதிய டிஐஜியாக ஏ.கே.விஸ்வநாதன்நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை சிபிஐயில் டிஐஜியாக இருந்து வந்தார்.

ஏற்கனவே இந்தப் பொறுப்பில் இருந்து வந்த சசியின் கூஜாவான சிவனாண்டிஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததுநினைவிருக்கலாம்.

முதல்வரின் புதிய செயலாளர்கள்:

இதேபோல முதல்வர் கருணாநிதியின் புதிய செயலாளர்களும்அறிவிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் புதிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் சந்தோஷமாக பணியில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சையத்முனீர் ஹோதாவை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து உள்துறைச் செயலாளராக்கினார்ஜெயலலிதா.

பின்னர் வழக்கம்போல் அவரை சஸ்பெண்ட் செய்தார்.

இந் நிலையில் சையத் முனீர் ஹோதாவின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்துள்ளகருணாநிதி அவரை தனது செயலாளராக நியமித்துள்ளார்.

இதேபோல நாகர்கோவிலில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக பணியாற்றி வரும்டி.ஆர்.ராமசாமி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கம்,

கருணாநிதியின் நிழல் என்று வர்ணிக்கப்படும், சட்டசபை செயல முன்னாள் கூடுதல்செயலாளர் சண்முகநாதன் ஆகியோரும் கருணாநிதியின் புதிய செயலாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+