விரைவில் உள்ளாட்சித் தேர்தல்?
சென்னை:
ஆட்சியைப் பிடித்து விட்ட தெம்பில் இருக்கும் திமுக, விரைவில் உள்ளாட்சித்தேர்தலையும் நடத்தி விட தீவிரமாக உள்ளதாம்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதத்தில்முடிவுக்கு வருகிறது.தற்போது சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்து ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்துள்ளதால், இதே சூட்டோடு உள்ளாட்சித் தேர்தலையும் நடத்திவிட வேண்டும் என்று திமுகவினர் தலைமைக்கு எடுத்துரைத்துள்ளனராம்.
கூட்டணிக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பின் வீரியம் குறைவதற்குள்அதைப் பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றி விட வேண்டும்என்று திமுக நினைக்கிறது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சிகள் திமுக வசம்வந்தன. நெல்லை, கோவை, சேலம் ஆகியவற்றை அதிமுக பிடித்தது. திருச்சிமாநிகராட்சி காங்கிரஸ் வசம் உள்ளது. பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளைஅதிமுகவே கைப்பற்றியது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பல புதிய அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன.விஜயகாந்த் கட்சிக்கு மக்களிடையே செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளது.
பாஜகவும் தனது பலத்தை இன்னும் மோசமாக இழந்து விடவில்லை எனத் தெரியவந்துள்ளது. அதிமுகவும் ஒரேயடியாக ஓய்ந்து போய்விடவில்லை என்பதுதெளிவாகியுள்ளது.
இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதால், நாள் கடத்தாமல் உள்ளாட்சித் தேர்தலைவிரைவிலேயே நடத்தி அதிலும் அறுவடை செய்து விட திமுக நினைக்கிறது.
எனவே ஜூலை மாத வாக்கில் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகக் கூடும்எனத் தெரிகிறது. அதற்குள் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியவாக்குறுதியான கலர் டிவி குறித்த அறிவிப்பை வெளியிட்டு விடவும் திமுக தரப்புதிட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications