அதிமுக தோல்வியால் மரணம்: 9 பேர்குடும்பங்களுக்கு ஜெ. ரூ. 1லட்சம் உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்டஅதிமுகவைச் சேர்ந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவியைமாஜி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் வேதனை அடைந்தசென்னையைச் சேர்ந்த வசந்தி, ஆனந்தன், வேலூர் மாவட்டம் ஜெமினி கணேசன்,திருவண்ணாமலை மாவட்டம் ஆலன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.இதேபோல தர்மபுரி மாவட்டம் கண்ணம்மாள், கோவை முனுசாமி, காளிமுத்து,தூத்துக்குடி பாலமுருகன், திருச்சி இளமாறன் ஆகியோர் ஜெயலலிதாவின்தோல்வியால் அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் மரணமடைந்தனர்.
இவர்களின் மரணங்களுக்கு இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ள ஜெயலலிதா,இவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனஅறிவித்துள்ளார்.
மேலும், வெற்றியும், தோல்வியும் சாதாரணமான விஷயம். இதற்காக அதிமுகவினர்யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் தொடர்ந்து உறுதியோடு உழைக்க வேண்டும்என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications