தற்காலிக சபாநாயகராக சுதர்சனம் நியமனம்17ம் தேதி சட்டசபை கூடுகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழகசட்டசபையின் முதல் கூட்டம் வருகிற 17ம் தேதி தொடங்குகிறது. இதற்கானஉத்தரவை ஆளுனர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் 17ம் தேதி தொடங்குகிறது.

தற்காலிக சபாநாயகராக மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பூந்தமல்லி தொகுதி காங்கிரஸ் எம்எலஏ ஆவார்.

16ம் தேதி மாலை 5 மணிக்கு ஆளுனர் பர்னாலா சுதர்சனத்திற்கு பதவிப் பிரமாணம்செய்து வைப்பார். இதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு சட்டசபைகூடுகிறது.

புதிய எம்.எல்.ஏக்களுக்கு சுதர்சனம் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

அதன் பின்னர் 19ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும். 24ம்தேதி சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

ஆளுனர் பர்னாலா கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்துசட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இக்கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+