கண்ணகி சிலையை பார்வையிட்டார் கருணாநிதி!: மெரீனாவில் மீண்டும் நிறுவ உத்தரவு
சென்னை:
கற்புக்கரசி கண்ணகியின் சிலை படு மோசமான இடத்தில், சிதிலமடைந்து போய்கிடந்ததைப் பார்த்து முதல்வர் கருணாநிதி கலங்கினார்.
முன்பு திமுக ஆட்சியில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி பல்வேறுதலைவர்களின் சிலைகள் மெரீனாவில் வைக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் கண்ணகிசிலை.ஆனால், கண்ணகி சிலையால் ஜெயலலிதாவுக்கு ராசியில்லை என்றும், போயஸ்கார்டனில் இருந்து கோட்டைக்குச் செல்லும் வழியில் கண்ணகி சிலை இருப்பதுஜெயலலிதாவின் ஜாதகத்துக்கு எதிராக உள்ளதாகவும் கேரளாவைச் சேர்ந்த பணிக்கர்என்ற ஜோதிடர் அட்வைஸ் தந்தார்.
இதையடுத்து இரவோடு இரவாக அந்த சிலையை தூக்கினார் ஜெயலலிதா. அப்போதுமுதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
சிலை அகற்றப்பட்டதற்கு ஒரு சப்பைக் கட்டு காரணத்தை ஜெயலலிதாவும் ஓ.பியும்கூறினர்.
லாரி மோதி சிலையின் பீடம் சேதம் அடைந்துவிட்டதாகவும் இதனால் அதை அகற்றிபத்திரமாக வைத்துள்ளதாகவும் ஜெயலலிதா கூறியதை யாரும் நம்பவில்லை.
உண்மையிலேயே லாரி மோதியிருந்தால் சேதமடைந்தத பீடத்தை சரிசெய்திருக்கலாமே என்ற கேள்விக்கு ஜெயலலிதாவிடம் இருந்து பதிலே இல்லை.
சிலையை மீண்டும் வைக்கக் கோரி மூன்றாண்டுகளுக்கும் மேலாக நடந்தபோராட்டங்கள், கோரிக்கைகளை ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை.
சிலையை தூக்கியதோடு மட்டுமல்லாமல் அதை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்குப்பைகளை போட்டு வைக்கும் அறையில் போட்டு வைக்க ஜெயலலிதாஉத்தரவிட்டார். அன்று முதல் கண்ணகி சிலை சாக்குப் பையில் கட்டப்பட்டுமோசமான நிலையில் கிடந்தது.
இந் நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்ணகி சிலை அதே இடத்தில்வைக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார்.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கண்ணகி சிலையை மீண்டும் பழையஇடத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகளில் கருணாநிதி இறங்கியுள்ளார்.
![]() |
| கண்ணகி சிலையை பார்வையிடும் கருணாநிதி |
இதற்காக நேற்றிரவு அவர் கடற்கரைக்கு வந்தார். கண்ணகி சிலை முன்பு இருந்தஇடத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், பொதுப் பணித்துறை அதிகரிகளும் உடன் இருந்தனர்.
அதிகாரிகளுடன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்திய பின்னர் கருணாநிதிஅங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் இன்று காலை எழும்பூர்அருங்காட்சியகத்துக்குச் சென்றார் கருணாநிதி. உடன் அதிகாரிகளும் சென்றனர்.
சாக்குப் பையில் கட்டப்பட்டு, சிதிலமடைந்த நிலையில், கேட்பாரின்றி கிடந்தகற்புக்கரசியின் சிலையைப் பார்த்த அவர் கலங்கினார். சிறிது நேரம் ஏதும் பேசாமல்நின்ற கருணாநிதி பின்னர் சிலைக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா என்றுஅருங்காட்சியக இயக்குனர் சித்திக்கிடம் கேட்டறிந்தார்.
சிலையின் விரல் பகுதி மட்டும் சேதமடைந்திருப்பதை அதிகாரிகள் சுட்டிக் காட்ட, அதை சரி செய்யுமாறுஸ்தபதிக்கு உத்தரவிட்டார் கருணாநிதி.
இதைத் தொடர்ந்து சிலையை புதுப்பித்து, மராமத்து செய்து மீண்டும் பழையஇடத்திலேயே நிறுவ பொதுப் பணித்துறையினருக்கும் செய்தித்துறையினருக்கும்உத்தரவிட்டார்.
இதையடுத்துசிலை சுத்தப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. விரைவில்மீண்டும் மெரீனாவில் கண்ணகி சிலை நிறுவப்படவுள்ளது.
மீண்டும் சீரணி அரங்கம்:
அதே போல மெரீனா கடற்கரையில் பொதுக் கூட்டங்கள் நடத்தும் வகையில் மீண்டும் சீரணி அரங்கத்தைக் கட்டவும் கருணாநிதி உத்தரவிட்டார்.
ஆளுனர் தேநீர் விருந்து:
இந் நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுனர் பர்னாலா தேநீர் விருந்தளித்தார்.
ஆளுனர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த தேநீர் விருந்தில், புதிய தலைமைச் செயலாளர் திரிபாதி, ஸ்டாலினின் குடும்பத்தினர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பின்னர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் பர்னாலாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications