ஐஜி ஆனார் ஜெ வழக்கை விசாரித்த துக்கையாண்டி
சென்னை:
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து, அதிமுக ஆட்சியில்ஓரங்கட்டப்பட்ட டிஐஜி துக்கையாண்டிக்கு ஐஜியாக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க 1997ம் ஆண்டில் திமுகஆட்சியில் துக்கையாண்டி நியமிக்கப்பட்டார். நேர்மைக்குப் பேர் போனதுக்கையாண்டியும் அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி விசாரணையை நடத்தினார்.
ஜெவால் பழிவாங்கப்பட்டவர்:
இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. டிஐஜி அதிகாரத்தில் இருந்த காவல்துறைஅதிகாரியான துக்கையாண்டியைத் தூக்கி நாகர்கோவில் அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தின் கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து தனது கோபத்தைத்தீர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.
இந் நிலையில் இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால்துக்கையாண்டிக்கும் நல்ல காலம் பிறந்துள்ளது.
![]() |
| துக்கையாண்டி (வலது புறம் சல்யூட் அடிப்பவர்) |
அவருக்கு ஐஜியாக பதவி உயர்வு அளித்துள்ள முதல்வர் கருணாநிதி, அவரைசென்னை குற்றப் பிரிவு ஐ.ஜியாக நியமித்துள்ளார். இதன் மூலம் அதிமுக ஆட்சிகாலஊழல் வழக்குகளை அவர் மீண்டும் தோண்டியெடுக்கும் பதவிக்கு வந்துள்ளார்.
மத்திய உளவுப் பிரிவு:
அதே போல சென்னையில் உள்ள மத்திய உளவுப் பிரிவில் தமிழக அதிகாரியாகஉள்ள துணை இயக்குனர் டிஐஜி ஆசிஷ் பங்காராவுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வுஅளிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்ந்து அதே பணியில் தொடர்வார்.
உளவுத்துறைக்கு புதிய எஸ்பி:அதே போல வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு போலீஸின் 3வது பட்டாலியன்கமாண்டன்ட்டாக உள்ள சந்திரசேகர் மாநில உளவுப் பிரிவு சிறப்பு எஸ்.பியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
க்யூ பிராஞ்சில் டேவிட்சன்:
மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம்,இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை கியூ பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
அப்பொறுப்பில் இருந்து வந்த சசிகலா சாய்ஸ் அதிகாரியான கந்தசாமி, சென்னைநிர்வாக உதவி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications