பீட்டருக்கு சட்டமன்ற காங். தலைவர் பதவிஞானசேகரன் துணை சபாநாயகர்?
சென்னை:
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி டெல்லி சென்றுள்ளார். அப்போது, திமுக ஆட்சியில் பங்கு கேட்பதுகுறித்து கட்சித் தலைமையுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தலாம் என்றுதெரிகிறது.
தமிழகத்தில் அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என பல்வேறு கோஷ்டிகளும்காங்கிரஸ் தலைமையை நச்சரித்து வருகின்றன.இதையடுத்து வீரப்ப மொய்லி மூலமாக அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றுஅறிக்கை விட்டுப் பார்த்தார் சோனியா காந்தி. ஆனால், அதற்கு திமுக தரப்பில்ஆழ்ந்த மெளனமே பதிலாக தரப்பட்டு வருகிறது.
இந் நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஐந்துமாநில தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழகத்தில் திமுக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்துசோனியா காந்தியுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி முக்கியஆலோசனை நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை காங். தலைவர் பீட்டர்?:
இந் நிலையில் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக பீட்டர் அல்போன்ஸ்தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
அவருக்கு சபாநாயகர் பதவியை கருணாநிதி தருவார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில்கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால், அதை திமுக தரப்புமறுக்கிறது.
இந் நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக பீட்டர் தேர்வு செய்யப்படுவார்என்று தெரிகிறது. வழக்கமாக இந்தப் பதவியைப் பிடிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், தொண்டாமுத்தூர் தொகுதியில் மதிமுக பொருளாளர்கண்ணப்பனிடம் தோற்றுப் போய்விட்டார்.
இதனால் அவையின் மூத்த உறுப்பினரும், சிறந்த பேச்சாளருமான பீட்டருக்கு அந்தபதவித் தரப்படலாம் என்று தெரிகிறது. இந்தப் பதவியைப் பிடிக்க யசோதாஉள்ளிட்டவர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
பீட்டருக்கு இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோரின் ஆதரவு தவிர முதல்வர்கருணாநிதியின் ஆதரவும் உள்ளதாகத் தெரிகிறது.
மூப்பனார் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பலம் பொருந்தியவராக விளங்கிய பீட்டர்எம்.பியாகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருந்தவர்.
மூப்பனார் மறைவுக்குப் பின்னர் ஒதுக்கப்பட்டார். இந் நிலையில் தேர்தலில்கடையநல்லூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏக்கள் கூட்டம் வருகிற 19ம் தேதிசென்னையில் நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிகலந்து கொள்கிறார்.
இக்கூட்டத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
துணை சபாநாயகர் ஞானசேகரன்?:
இந் நிலையில் தமிழக சட்டசபை துணை சபாநாயகராக வேலூர் தொகுதி காங்கிரஸ்எம்.எல்.ஏ. ஞானசேகரன் நியமிக்கப்படக் கூடும் என்று உறுதியாகத்தெரியவந்துள்ளது. இதுதவிர பல்வேறு வாரியத் தலைவர் பதவிகளும் காங்கிரஸ்கட்சிக்கு வழங்கப்படவுள்ளன.
ஆட்சியில் பங்கு கோரும் காங்கிரஸ் கட்சியினரை சமாதானப்படுத்தும் வகையில்இந்த வியூகத்தில் திமுக இறங்குகிறது.
நான்காவது முறையாக வேலூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ள ஞானசேகரன்ஒரு வழக்கறிஞர், சிறந்த பேச்சாளர். அவர் துணை சபாநாயகராகவுள்ளார்.
சபாநாயகர் துரைசாமி:
சபாநாயகர் பொறுப்புக்கு திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் வி.பி.துரைசாமிஅல்லது அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. ஆவுடையப்பனின் பெயர்கள் அடிபட்டாலும்துரைசாமிக்கே வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.
முன்னதாக சபாநாயகர் பொறுப்புக்கு ராஜ கண்ணப்பன், பிச்சாண்டி, பொங்கலூர்பழனிச்சாமி ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், இந்த மூவருமேஅமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கின்றனர். இதனால் அவர்களது பெயர்கள்கைவிடப்பட்டன. இறுதியில் துரைசாமியின் பெயர் முடிவாகியுள்ளதாக திமுகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications