ஜெ அணுகுமுறை ஜனநாயக விரோதம்: சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக எம்.எல்.ஏக்களை காட்டு மிராண்டிகள், திமுக அரசை குரங்கு கையில் கிடைத்தபூமாலை என்றெல்லாம் ஜெயலலிதா வசை பாடியுள்ளது ஜனநாயகத்திற்கு ஏற்றஅணுகுமுறை அல்ல என்று மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த 2 ரூபாய்க்கு கிலோ அரிசி,விவசாயிகளின் கூட்டறவுக் கடன்கள் தள்ளுபடி, சத்துணவில் வாரம் இருமுறைமுட்டை ஆகிய வாக்குறுதிகளை பதவியேற்ற உடனேயே முதல்வர் கருணாநிதிநிறைவேற்றியிருப்பது, திமுக ஆட்சியின் சிறப்பான தொடக்கத்தை காட்டுவதாகஅமைந்துள்ளது.

இதேபோல மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

கோவை சிங்காநில்லூர் தொகுதியில் 14 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கட்சிதோல்வி அடைந்துள்ளது. வாக்கு எண்ணப்படும் தினத்தன்று தேர்தல் பார்வையாளர்பகல் 11 மணிக்கு வெளியூர் செல்ல விமான டிக்கெட் முன் பதிவு செய்துவைத்துள்ளார்.

இதைப் பார்க்கும்போது வாக்கு எண்ணிக்கையில் அவர் கவனம் செலுத்தவில்லைஎன்று எண்ணத் தோன்றுகிறது. எனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குதொடருவோம்.

திமுக எம்.எல்.ஏக்களை காட்டுமிராண்டிகள் என்றும், விஷப் பாம்புகள் என்றும், திமுகஆட்சியை குரங்கு கையில் கொடுத்த பூமாலை என்றும் ஜெயலலிதா கருத்துதெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்களும், அணுகுமுறைகளும் ஜனநாயக நெறிமுறைகளுக்குஏற்றதல்ல. கண்ணகி சிலை தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையைநாங்கள் ஏற்கவில்லை.

அதில் அவர் கூறியுள்ள காரணங்கள் நகைப்புக்குரியவை. முதல்வராக இருந்தபோதுசட்டசபையில் கூட இந்தப் பிரச்சினையை எழுப்பாமல் அலட்சியப்படுத்தியவர் தான்ஜெயலலிதா.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு அடுத்த மாதம் 17, 18, 19ஆகிய தேதிகளில் மதுரையில் கூடுகிறது. இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்தநர்வாகிகள் கலந்து கொள்கிறார்.

இதில் தேர்தல் களத்தில் கிடைத்த அனுபவங்களை நிர்வாகிகள் பகிர்ந்துகொள்வார்கள். எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்என்றார் வரதராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+