புத்துயிர் பெறும் உழவர் சந்தைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, முந்தைய அதிமுக ஆட்சியில்கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழா கண்ட உழவர் சந்தைகள் புத்துயிர் பெறுகின்றன.

தப்பிப் பிழைத்த உழவர் சந்தைகளை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.அதே போல மூடப்பட்ட உழவர் சந்தைகளை மீண்டும் திறக்கவும் நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் நடந்த உருப்படியான காரியங்களில் இரண்டு. ஒன்று உழவர்சந்தைகள். இன்னொன்று மினி பஸ்.

இந்த இரு திட்டங்களையும் ஒழித்துக் கட்ட அதிமுக ஆட்சியில் முயற்சி நடந்தது.ஆனால், மினி பஸ்களை நிறுத்தினால் மக்களிடம் பெரும் கெட்ட பேர் வரும்என்பதால் அந்த பஸ் முதலாளிகளை அழைத்து வேண்டிய மட்டும் வசூல் செய்துகொண்டு விட்டுவிட்டனர்.

ஆனால், உழவர் சந்தைகளை ஜெயலலிதா அரசு கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நேரடியாக மார்க்கெட்டுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்யும் வகையில் இந்த உழவர் சந்தைகள் இயங்கி வந்தன.

இடைத் தரகர்கள் இல்லாமல் தனது உற்பத்தி பொருளுக்கு தானே விலை நிர்ணயித்துவிவசாயிகள் விற்றதால் அவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் லாபம் கிடைத்தது.

இத் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. புரோக்கர்கள்குறுக்கீடு இல்லாததால் மண்டி நடத்தி விவசாயிகள் வயிற்றில் அடித்தவர்கள்ஒடுங்கினர்.

குறைந்த விலையில் பொது மக்களுக்கும் காய்கறிகள் கிடைத்தன. ஆனால் அதிமுகஆட்சியில் உழவர் சந்தைகளின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டது.

சந்தைகளில் கடை போடுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது, மின் கட்டணம்உயர்ந்தது, சந்தைகளுக்கு தண்ணீர் வசதி, பஸ் வசதிகள் நிறுத்தப்பட்டன. உழவர்கள்தவிர வியாபாரிகளும் கூட கடை போட அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் படிப்படியாக உழவர் சந்தைகள் மூடுவிழா கண்டன. சில இடங்களில்மட்டுமே அவை தப்பிப் பிழைத்தன.

இந் நிலையில் தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் உழவர் சந்தைகளுக்குபுதுவாழ்வு கிடைத்துள்ளது.

மூடப்பட்டு, கவனிப்பாரின்றி கிடக்கும் உழவர் சந்தைகளை திமுகவினரே திறந்துபுதுப்பிக்க தொடங்கியுள்ளனர். அதிகாரிகளையும் அவர்களை களமிறக்கிவிட்டுள்ளனர். அவர்களுக்கு விவசாயிகளும் உதவி செய்கின்றனர்.

மாநிலம் முழுவதும் மூடப்பட்டுக் கிடக்கும் அத்தனை உழவர் சந்தைகளும்திறக்கப்பட்டு மீண்டும் புது வேகத்தில் செயல்படத் தொடங்கும் என்று திமுககூறியுள்ளது.

அரசும் இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+