கண்ணகி சிலை விவகாரம்: திசை திருப்பும் ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்ற நான் உத்தரவு ஏதும்பிறப்பிக்கவில்லை. சிலையின் பீடம் சேதமடைந்ததால்தான் சிலை அங்கிருந்துஅகற்றப்பட்டது என்று மாஜி முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை விவரம்:

மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை எனது உத்தரவின் பேரிலேயேஅகற்றப்பட்டது, எனது ஆட்சிக்காலம் முடியும் வரை சிலையை மீண்டும் வைக்க நான்விரும்பவில்லை என்பது போலவும்,

இப்போது கருணாநிதி முதல்வராகி விட்டதால் அவர்தான் அந்த சிலையை மீண்டும்அதே இடத்தில் வைக்கப் போகிறார் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுவருகிறது.

இதுதொடர்பாக பத்திரிகைகளிலும் தவறான செய்திகளே வந்து கொண்டுள்ளன.

இதில் எள்ளளவும் உண்மை இல்லை. கண்ணகி சிலையை அப்புறப்படுத்தும்படி நான்எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனது ஆட்சிக்காலத்தில் ஒரு லாரி கண்ணகிசிலையின் பீடத்தில் மோதி அதனால் பீடம் சேதமடைந்தது.

இதை பொதுப் பணித்துறை அதிகாரிகளும், பொறியாளர்களும் பார்வையிட்டு, லாரிமோதியதில் பீடம் பலவீனமாகி விட்டதாகவும், சிலையின் பாரத்தை பீடத்தால் தாங்கமுடியாது எனவும், எந்த நேரத்திலும் அது விழுந்து விடும் என்றும் தீர்மானித்துசிலையை அப்புறப்படுத்தி எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாகவைத்தார்கள்.

போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுப் பணித்துறை அதிகாரிகள்அடங்கிய குழு சிலை இருந்த இடத்தைப் பார்வையிட்டு, எதிரில் வருகின்றவாகனங்களுக்கு அது இடையூறாக அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்து,கடற்கரையிலேயே வேறு இடத்தில் சிலையை நிறுவலாம் என்று அரசுக்கு யோசனைதெரிவித்தார்கள்.

வேறு இடத்தைத் தேர்வு செய்வதற்குள் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில்,திமுகவினர் அதே இடத்தில்தான் சிலையை நிறுவ வேண்டும் என்று கோரிஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டனர். அன்றைய தலைமை நீதிபதியேவழக்கை விசாரித்தார்.

அரசுத் தரப்பில் இதுகுறித்து விளக்கம் கேட்கும்போது, சிலை இருந்த இடம்போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக அரசுத் தரப்பு கூறியது.

இதையடுத்து கண்ணகி சிலையை அதே இடத்தில் வைக்காமல் கடற்கரையிலேயேவேறு இடத்தில் வைக்கலாம் என்று கூறி அதற்காக 3 இடங்களை பரிந்துரைக்குமாறுதலைமை நீதிபதி கேட்டுக் கொண்டார்.

அதன் பேரில் தமிழக அரசு மூன்று இடங்களைத் தேர்வு செய்து விவரங்களைஉயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் அதன் பின்னர் உயர்நீதிமன்றம் தீர்ப்பேவழங்கவில்லை.

அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதே உண்மை.

எனவே எனது ஆட்சிக்காலம் முடியும் வரை சிலையை நிறுவுவதில்லை என்று நான்பிடிவாதமாக மறுத்து விட்டேன் என்பது போல கருணாநிதியும், பத்திரிகைகளும்,ஊடகங்களும் திரித்துக் கூறுவது உண்மையற்ற கூற்றாகும்.

உயர்நீதிமன்றம் ஒரு இடத்தைத் தேர்வு செய்து கூறியிருந்தால் நிச்சயம் அந்த இடத்தில்சிலை வைக்கப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+