கண்ணகி சிலையை அறுத்து எடுத்துள்ளனர்-கருணாநிதி
சென்னை:
கண்ணகி சிலையை லாரி இடித்தது போலத் தெரியவில்லை, ஜெயலலிதா ஆட்சியில் சிலையை அறுத்து தான்எடுத்துள்ளார்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:கேள்வி: தமிழத்தின் நிதி நிலை எப்படி இருக்கிறது?
கருணாநிதி: நான் எப்படி இருக்கிறேனோ அது போல இருக்கிறது.
கேள்வி: பெரியார் சமத்துவபுரம் தொடர்ந்து கட்டித் தரப்படுமா?
பதில்: காலப்போக்கில் எல்லாம் நடக்கும்.
கேள்வி: மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுமா?
பதில்: முடியும் என்று நம்புகிறேன்
கேள்வி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கைவருமா?
பதில்: ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்கின்றன
கேள்வி: ஆட்சி மாறும்போது அதிகாரிகளை திடீர் திடீர் என மாற்றுகிறீர்களே?
பதில்: ஜெயலலிதா ஆட்சியில் பல அதிகாரிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர். அகலிகைக்கு விமோச்சனம்கொடுத்தது மாதிரி அவர்களுக்கும் விமோச்சனம் கொடுக்க வேண்டி இருக்கிறதல்லவா?
கேள்வி: கண்ணகி சிலை எப்போது திறக்கப்படும்?
பதில்: கண்ணகி சிலையை லாரி இடித்தது போலத் தெரியவில்லை. லாரி இடித்திருந்தால் பீடம் தான் இடிந்துஇருக்கும். ஆனால், கண்ணகி சிலையின் தலை முதல் கால் பகுதி வரை இரும்பு ராடு அறுத்து எடுக்கப்பட்டுள்ளது.லாரிக்கு கையும் கிடையாது. அறுத்து எடுக்க வாளும் கிடையாது.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எழும்பூர் அருங்காட்சியகத்துக்குப் போய் பாருங்கள். கண்ணகி சிலையைஅறுத்து தான் எடுத்துள்ளார்கள்.
அந்தச் சிலையை உருவாக்கிய ஸ்தபதி இன்று தான் சென்னைக்கு வந்திருக்கிறார். அவர் பார்த்த பின், சிலையைஅதே இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கேள்வி: மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து மதிமுக நீக்கப்படுமா?
பதில்: அது பற்றி எனக்குத் தெரியாது என்றார் கருணாநிதி.
கோடை மழை-விவசாயிகளுக்கு உதவி:இதற்கிடையே கோடை மழையால் நாசமடைந்த பயிர்களுக்குரிய இழப்பீடுகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குகருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் சேலம், விருதுநகர், தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை மழை பெய்து வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள், நெற் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன என்றும் இதனால் விவசாயிகள் கடும்பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக முதல்வர் அலுவலகத்திற்குத் தகவல்கள் வந்துள்ளன.
அதன் பேரில் நிலைமைகளை உடனுக்குடன் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பினை அறிந்து,அதற்கேற்ற இழப்பீட்டை வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications