இலங்கையில் ரத்தக் களறி: குழந்தைகள்-பெண்கள் அப்பாவி தமிழர்கள் படுகொலையால் கொந்தளிப்பு
கொழும்பு:
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் கொடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
![]() |
| படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் குடும்பம் |
யாழ்பாணத்தில் அல்லைபிட்டி, ஊர்காவாற்றுறைப் பகுதியில் இரண்டு குழந்தைகள் உள்பட 13 பேரை வெட்டியும்சுட்டும் கொன்றுள்ளது இலங்கை ராணுவம். இச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
அப்பாவி மக்களின் வீடுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினரும் ராணுவத்தினரும் கண்மூடித்தனமாகவீடுகளில் இருந்த தமிழர்களை சுட்டதோடு வீடுகளில் புகுந்து சரமாரியாகவும் வெட்டித் தள்ளினர்.
இதில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் 4 மாத குழந்தை, 4 வயது குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர்கொல்லப்பட்டனர். சில நாட்களுக்கு முன் நடந்த இச் சம்பவத்தால் தமிழர் பகுதிகளில் அச்சம் குடிகொண்டுள்ளது.
மேலும் அதே போன்ற கொடிய தாக்குதல்களில் ராணுவ உதவியுடன் சிங்கள வெறிக் கும்பல்களும்ஈடுபட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை ராணுவம் மற்றும் சிங்கள வெறியர்களின் தாக்குதல்கள் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் எனவிடுதலைப் புலிகள் மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே புத்தூர் பகுதியில் இரு தமிழ் வியாபாரிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதோடு, இந்தபடுகொலையை மறைக்க அவர்களது உடல்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
தமிழர் பகுதிகளில் புகுந்து குழந்தைகள், பெண்களைக் கூட சிங்கள வெறியர்களும் ராணுவமும் கொல்லஆரம்பித்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications