6ஐ வைத்து கட்சியை வளர்ப்போம்: வைகோ
சென்னை:
மதிமுகவுக்கு 6 எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளனர். அதை வைத்துக் கொண்டுசிறப்பான முறையில் செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக ஆட்சி மன்றக் குழு மற்றும் பல்வேறு உயர் மட்டக் குழுக்களின் ஆலோசனைக்கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவகமானதாயகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் வைகோ பேசுகையில், முதல் முறையாக நமது கட்சிக்கு சட்டசபையில்பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. 6 எம்.எல்.ஏக்கள் நமக்குக் கிடைத்துள்ளனர். இதைஅடிப்படையாக வைத்து கட்சியை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும்.
தமிழகத்தில் கட்சியை வளர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.அனைவரும் ஒன்றுபட்டு கட்சியை வளர்க்கும் ஒரே குறிக்கோளோடு செயல்படவேண்டும் என்றார்.
கடந்த 13 ஆண்டுகளில் ஒரு எம்.எல்.ஏவைக் கூட பெற்றிராத மதிமுக முதல்முறையாக, 6 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபைக்குள் நுழைவது குறிப்பிடத்தக்கது.
விலகலை: பொடா நாகராஜன் தடார்
இதற்கிடையே மதிமுகவில் இருந்து நான் விலகியதாக வந்த செய்தியில் உண்மைஇல்லை என்று மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதிமுக பிரமுகர் பொடாநாகராஜன் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
வைகோ பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவருடன்சேர்ந்த பொடாவில் சிறைவாசம் அனுபவித்தவர் நாகராஜன். பொடாவில் கைதுசெய்யப்பட்டு விடுதலையானதால் அவருடைய பெயருடன் பொடாவும் சேர்ந்துகொண்டது.
பஞ்சு மில் அதிபரான நாகராஜன், மதிமுகவின் மாநிலத் தணிக்கைக் குழுஉறுப்பினராக இருந்து வந்தார். சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில்அவர் சீட் கேட்டிருந்தார்.
ஆனால் மாவட்டச் செயலாளர் வீர இளவரசனுக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால்அவர் அதிருப்தியுடன் இருந்தார்.
இந் நிலையில் மதிமுகவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக கூறி பொடாநாகராஜன் வைகோவுக்கு கடிதம் எழுதிய விவரம் வெளியில் வந்தது.
இதையடுத்து அவரை மதிமுக தரப்பு அழைத்துப் பேசி சமாதானப்படுத்திவிட்டதாகத்தெரிகிறது.
இந் நிலையில் வைகோவுக்கு நாகராஜன் இன்னொரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
நான் எனது பதவியிலிருந்து விலகுவதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மைஇல்லை. நான் என்றும் தங்களுடைய தலைமையின் கீழ் பணிபுரிவேன் என்பதைஉறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மாமாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், இரண்டு நாட்களில்உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார் நாகராஜன்.
வாரத்துக்கு ஒரு அரசியல் நிலை எடுக்கும் பல்டி மன்னன் வைகோவின் கட்சி பிரமுகர்அவரை விட நன்றாகவே பல்டி அடித்து தனது அரசியல் அதலெட்டிக் திறமையைநிரூபித்துள்ளார்.












Click it and Unblock the Notifications