மனித உரிமை ஆணைய டிஜிபியானார் நடராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை காவல்துறை கமிஷ்னராக இருந்து கொண்டு தேர்தல் நேரத்தில்ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சார பாணியில் பேட்டி தந்து, சிக்கலில் மாட்டி, தேர்தல்ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி நடராஜ், இப்போது டப்பாபதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணைய கூடுதல் டிஜிபியாக அவர் மாற்றப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து நிர்வாக ரீதியாகவும், காவல்துறையிலும் பல்வேறுமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தலைமை லஞ்ச ஒழிப்புஅதிகாரியான கூடுதல் டிஜிபி மாத்தூர் பதவி உயர்த்தப்பட்டு அதே பணியில்தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாக இருந்த கூடுதல்டிஜிபி காளிமுத்துவுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகநியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவின் பால் நிறுவன தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக இருந்து வந்த கூடுதல் டிஜிபிவெங்கடகிருஷ்ணன் திருச்சி, போக்குவரத்துக் கழக தலைமை லஞ்ச ஒழிப்புஅதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தலைமையிட கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த ஆர்.நடராஜ், மாநில மனிதஉரிமை ஆணைய கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

அப்பொறுப்பில் இருந்து வந்த ராஜேந்திரன், சென்னை நிர்வாக கூடுதல் டிஜிபியாகமாற்றப்பட்டுள்ளார்.

மத்திய அரசுப் பணியில் இருந்து வந்த கூடுதல் டிஜிபி சவானி, நடராஜ் வகித்து வந்தபதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+