சட்டசபைக்கு புதிய செயலாளர்-புதிய கொறடா தற்காலிக சபாநாயகர் இன்று பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் உறுப்பினர் டி.சுதர்சனம்இன்று மாலை பதவியேற்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான சுதர்சனம் திருவள்ளூர் தொகுதியில் வெற்றிபெற்றவர்.

இன்று மாலை ஆளுனர் மாளிகையில் தாற்காலிக சபாநாயகராக அவர் பதவியேற்றுக்கொள்கிறார். ஆளுனர் பர்னாலா சுதர்சனத்திற்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

இந் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதைத் தொடர்ந்து நாளை சட்டசபை கூடுகிறது. அப்போது புதியஉறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் சுதர்சனம் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

இதைத் தொடர்ந்து 19ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது.

அதன் பின்னர் புதிய சபநாயகரின் தலைமையில் 24 ம் தேதி சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அப்போது ஆளுனர் பர்னாலா உரை நிகழ்த்துவார்.

ராஜாராமனுக்கு கல்தா:

இதற்கிடையே, சட்டசபை செயலராக நீண்ட காலமாக இருந்து வந்த ராஜாராமன்நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதில் புதிய செயலராக என்.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.செல்வராஜ் இதுவரை இணை செயலராக இருந்து வந்தார்.

பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ராஜாராமன் 2003லேயே ஓய்வு பெற்றுவிட்டார்.ஆனால், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பதால் ஆண்டுதோறும் பதவிநீட்டிப்பு பெற்று பதவியில் தொடர்ந்து வந்தார்.

தலைமைக் கொறடா சக்கரபாணி:

இந் நிலையில் தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக திமுகவைச் சேர்ந்தசக்கரபாணி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.

சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ ஆவார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரை தலைமை கொறடாவாக கருணாநிதிநியமித்துள்ளார்.

தலைமை வழக்கறிஞர் விடுதலை:

அதே போல தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து வந்தஎன்.ஆர்.சந்திரனுக்குப் பதில் திமுகவைச் சேர்ந்த ஆர்.விடுதலை அந்தப் பொறுப்பில்நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தலைமை வழக்கறிஞராக என்.ஆர்.சந்திரன் பணியாற்றிவந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து என்.ஆர்.சந்திரன் தனது பதவியைராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள்அமைச்சர் ராகவானந்தத்தின் மகனும், மூத்த திமுக வழக்கறிஞருமான ஆர்.விடுதலைநியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக தொடர்பான பல்வேறு முக்கிய வழக்குகளில் விடுதலை ஆஜராகியுள்ளார்.கடந்த திமுக ஆட்சியில் அரசு பிளீடராக அவர் பணியாற்றியுள்ளார். தனது புதியபொறுப்பை நேற்று இரவு 10 மணிக்கு விடுதலை ஏற்றுக் கொண்டார்.சட்டசபை சிபிஎம் தலைவர் கோவிந்தசாமி:

இதற்கிடையே சட்டசபை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக திருப்பூர்எம்.எல்.ஏ கோவிந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களில் வெற்றி கிடைத்தது. வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குமாநிலச் செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+