அவினாசி-ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் பலி
அவினாசி:
கோவை மாவட்டம் அவினாசி அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர்பரிதாபமாக இறந்தனர்.
துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியைச் சேர்ந்த 16 பேர் மினி டோர் சரக்குஆட்டோ மூலம் ஈரோடு மாவட்டம் செங்கம்பள்ளி பகுதியில் உள்ள தங்களது குலதெய்வத்தை வழிபடச் சென்றனர். ஆட்டோவை மனோகரன் என்பவர் ஓட்டினார்.கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு இரவு தங்களது ஊருக்குக் கிளம்பினர். கனமழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் அமர்ந்திருந்தவர்கள் தார்ப்பாய்போட்டு தங்களை மூடிக் கொண்டு ஆட்டோவில் அமர்ந்திருந்தனர்.
அவினாசி அருகே உள்ள முண்டியம்கிணறு பகுதியில் ஆட்டோ வந்தபோது,முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென பிரேக் அடித்தது.
இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ டிரைவர் வேகத்தைக் குறைத்தார். அப்போதுஆட்டோவுக்குப் பின்னால் வந்த தவிடு ஏற்றி வந்த லாரி படு வேகத்தில் ஆட்டோ மீதுபயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் மணி, ராஜகோபால்,சுப்ரமணி, தங்கமணி, ராமமூர்த்தி, குழந்தைவேல் ஆகிய ஆறு பேரும் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் சகுந்தலா என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications