22ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வருகிற 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் தயாரிக்கப்பட்டுவிட்டது. இடையில் தேர்தல் குறுக்கிட்டு விட்டதால் தேர்வு முடிவுகள் வெளியாவதுதாமதமானது.இந் நிலையில் 22ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசின்பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அன்றே சம்பந்தப்பட்ட பள்ளிகளில்மதிப்பெண் பட்டியல்களை மாணவ, மாணவியர் பெற்றுக் கொள்ளலாம் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை இணைய தளங்கள் மூலமும் வெளியிட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழிற் கல்விபடிப்புக்கான நுழைவுத் தேர்வு நாளை தொடங்குகிறது. நாளை காலை உயிரியல்தேர்வும், பிற்பகலில் இயற்பியல் தேர்வும், நாளை மறுநாள் கணித தேர்வும் நடக்கிறது.












Click it and Unblock the Notifications