டிவி நடிகை ஷ்ரத்தா தற்கொலை
சென்னை:
பிரபல டிவி டிவி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்-சுபத்ராவின் இளைய மகள் ஷ்ரத்தா. இவர் எதிர்நீச்சல் என்றடிவி தொடர் மூலம் சின்னத் திரையில் நுழைந்தவர்.
![]() |
கோலங்களில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்து வந்தார். பெற்றோருடன் அடுக்குமாடிக்குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா பயோ டெக்னாலஜி படித்துக் கொண்டே நடித்துவந்தார்.
இவருக்கு ஷ்ரேயா என்ற தங்கை உண்டு. ஷ்ரேயா கோடை விடுறைக்காககொல்கத்தாவில் உள்ள உறவினர் வீட்டுக்குப் போய் விட்டார். வீட்டில் ஷ்ரத்தாவும்,அவரது பெற்றோரும் மட்டும் உள்ளனர். இன்று காலை ஷ்ரத்தா நீண்ட நேரமாகியும்அவரது அறையிலிருந்து வெளியே வராததால், அவரது தாயார் சுபத்ரா கதவைத்தட்டினார்.
அப்போது கதவு திறந்து கொள்ளவே, உள்ளே மின் விசிறியில் தூக்கு மாட்டி ஷ்ரத்தாதற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
கட்டில் அருகே ஷ்ரத்தா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. சுத்தமானஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில்,
அப்பா, அம்மாவுக்கு, உங்களை நான் மிகவும் மன வருத்தம் அடையச் செய்துவிட்டேன். உங்கள் மகளாக இருப்பதற்கு எனக்கு அருகதை இல்லை. என்னைமன்னித்து விடுங்கள், எனது சாவுக்கு நானே காரணம். எனக்கு இந்த உலகத்தில் வாழப்பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என்னை யாரும்தற்கொலைக்குத் தூண்டவும் இல்லை என்று எழுதி வைத்துள்ளார்.
![]() |
நடிப்பா, படிப்பா என்பது குறித்து ஷ்ரத்தா குழப்பிக் கொண்டிருந்ததாகவும்,அதுகுறித்து அவரது தந்தை கண்டிப்பான சில அறிவுரைகளைக் கூறியதால் மனம்உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம்,காதல் தோல்வி என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஷ்ரத்தா கண் தானம் செய்திருந்ததால் அவரது கண்கள் அகற்றப்பட்டுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் உடல் பிரேதப்பரிசோதனை நடந்தது.
டிவி நடிகை வைஷ்ணவியின் தற்கொலையே இன்னும் மறக்கப்படாத நிலையில் அடுத்த டிவி நடிகையும்தற்கொலை செய்து கொண்டுள்ளது சின்னத் திரை நடிகைகள் வட்டாரத்தில் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.வைஷ்ணவிக்கு முன் நடிகை ஷாலினி தற்கொலை செய்து கொண்டது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications