நன்றி: அதிமுக வேட்பாளர்களுக்கு ஜெ உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் போட்டிட்ட அனைத்து அதிமுக வேட்பாளர்களும் தங்களதுதொகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: சட்டசபைத் தேர்தலில் தனிப்பட்டகட்சிகளில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற பெருமையை மக்கள்அதிமுகவுக்கு அளித்துள்ளனர்.

அதிக சதவீத வாக்குகள் பெற்ற கட்சியாக அதிமுக விளங்குகிறது. வரலாற்றில்இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக சட்டசபையில் அதிகஅமர்ந்துள்ளது.

தமிழக மக்கள் கடந்த காலத்தில் நம்மோடு இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.நாளையும் நம்முடன்தான் இருப்பார்கள்.

அந்த மக்களுக்கு கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஒரு பொற்கால ஆட்சியை நாம்வழங்கினோம்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்குப்பணியாற்ற வேண்டியது நமது கடமை. தமிழக மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம்,மேன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் பொறுப்பும் அதிமுகவுக்கே உண்டு.

அதை சிறப்பாக நிறைவேற்ற நேண்டிய கடமை அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உண்டு.

எனவே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், குறைந்த வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர்கள் என தேர்தலில் போட்டியிட்டவேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளுக்கு சென்று தங்களுக்குவாக்களித்த வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் நேரில் நன்றிகளைத் தெரிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+