அதிகாலையில் சட்டசபை காங் தலைவர் தேர்வு!
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நாளை காலை 7 மணிக்குசத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் வென்றுள்ளது. சட்டசபைகாங்கிரஸ் தலைவர் தேர்வு நாளை நடைபெறுகிறது.மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி மேற்பார்வையில் நடைபெறும் இத்தேர்வில்தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
நாளை காலை 9 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர்பொறுப்பேற்கவுள்ளதால், 7 மணிக்கே சட்டசபை கட்சித் தலைவர் தேர்தலை நடத்திமுடிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
இதனால் எல்லா எம்எல்ஏக்களும் காலை 6 மணிக்கே சத்தியமூர்த்தி பவனுக்குவந்துவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். (நல்லவேலை நைட்டே வந்துபடுத்துவிட வேண்டும் என்று சொல்லாமல் விட்டார்கள்)
கடையநல்லூர் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் கட்சித் தலைவராகும் வாய்ப்புஅதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. வேலூர் ஞானசேகரன் துணைத் தலைவராகக்கூடும். யசோதாவுக்கு செயலாளர் பொறுப்பு கிடைக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications