தாயார் நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி!
திருவாரூர்:
முதல்வர் கருணாநிதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள தனது தாயார்அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இளம் வயதில்தான் வாழ்ந்த திருக்குவளை வீட்டுக்கும் சென்று மலரும் நினைவுகளில் மூழ்கினார்.
முதல்வர் பதவியேற்ற பின்னர் கருணாநிதி மேற்கொண்ட முதல் வெளியூர் பயணம்இது.
அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டகருணாநிதி, தாயாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் மனைவி தயாளு அம்மையார், மகன் ஸ்டாலின், மகள் செல்வி,ஸ்டாலினின் மனைவி துர்கா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சிறிது நேரம்அங்கிருந்த பின் திருவாரூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தந்தையார் முத்துவேலர்படத்தைத் தொட்டு வணங்கினார். முரசொலி மாறன் படத்தையும் வாஞ்சையுடன்தடவிக் கொண்டார்.
![]() |
பின்னர் திருக்குவளைக்குச் சென்ற கருணாநிதி, அங்கு இளம் பிராயத்தில் தான்வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்த்து மலரும் நினைவுகளில் மூழ்கினார்.
சாலைப் பணியாளர்கள் மனு:
முன்னதாக, தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை விரைவில் வழங்கஆவண செய்யுமாறு தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கம் கருணாநிதியிடம்கோரிக்கை வைத்துள்ளது.
சண்முகராஜா தலைமையில் சாலைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் திருவாரூர்புறப்பட்டுக் கொண்டிருந்த கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர்கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், இறந்த சாலைப் பணியாளர்கள் குடும்ப வாரிசுகளுக்கு அரசு வேலை தரவேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதேபோல நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதனையும் சந்தித்து மனுகொடுத்தனர்.













Click it and Unblock the Notifications