ஜெ, விஜயகாந்த் எம்எல்ஏக்களாக பதவியேற்பு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர்இன்று சபாநாயகர் அறையில், தற்காலிக சபாநாயகர் சுதர்சனம் முன்னிலையில்,எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்றுதொடங்கியது. இன்று பிற்பகல் 12 மணி வரை பதவியேற்பு நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
![]() |
ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட ஐந்து பேரைத் தவிர மற்ற அனைவரும் நேற்றேபதவியேற்றுக் கொண்டனர்.
இந் நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தார்.சபாநாயகர் அறையில் தற்காலிக சபாநிாயகர் சுதர்சனம் முன்னிலையில் அவர்உறுப்பினர் உறுதிமொழியை வாசித்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப்போட்டார்.
அவர் போன அரை மணி நேரம் கழித்து நடிகர் விஜயகாந்த் வந்தார். அவரும்உறுப்பினர் உறுதிமொழியை வாசித்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப்போட்டார்.
பின்னர் விஜய்காந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
![]() |
தொடர்ந்து சட்டசபைக்கு வருவேன். மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவேன்.உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம். தேர்தலில் புதியவாக்காளர்கள், மாணவர்கள் எங்கள் கட்சிக்கு அதிக ஆதரவு தந்துள்ளனர்.
இப்போதுதான் திமுக ஆட்சி தொடங்கியிருக்கிறது. எனவே 6 மாதம், 1 வருடம் இந்தஆட்சியின் செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் ஆட்சி எப்படிஎன்று கூற முடியும். எனவே எடுத்தவுடன் திமுக ஆட்சியை தட்டிக் கேட்க முடியாது.
எனக்கு யாரும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. அப்படி வந்த செய்திகளுக்கு நான்பொறுப்பல்ல.
திமுகவால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று நான்எப்போதுமே சொன்னதில்லை என்றார் விஜயகாந்த்.
கொலை மிரட்டல் புரளி:
முன்னதாக விஜயகாந்த்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும்,இதுகுறித்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்க விஜயகாந்த்திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் முடிந்து, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் தனதுவீட்டுக்கு தொடர்ந்து திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இந் நிலையில் விஜயகாந்த்தின் சென்னை சாலிகிராம் வீட்டிற்கும், கோயம்பேட்டில்உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்திற்கும் தினசரி சிலர் தொலைபேசியில்கொலை மிரட்டல் விடுத்து வருவதாக புரளி கிளப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் அதிமுக இருப்பதாக திமுக தரப்பு கூறுகிறது.














Click it and Unblock the Notifications