சிவாஜிக்கு புதிய மணி மண்டபம்

Subscribe to Oneindia Tamil


நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபமம், சிலையும் தமிழக அரசின்சார்பில் நிச்சயம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவை என்ற அமைப்பின் நிர்வாகிகள் அதன் தலைவர்சந்திரசேகரன் தலைமையில் கருணாநிதியை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைக்க அடையாறு சத்யோஸ்டுடியோவக்கு எதிரே முந்தைய அரசு இடம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால் அந்தஇடம் பொதுமக்கள் வந்து செல்ல போதுமானதாக இல்லை.

karunanithi&Sivagi statue
எனவே அந்த இடத்திற்குப் பதில் கிரீன்வேஸ் சாலையில் அம்பேத்கர் மணி மண்டபம்அருகிலோ அல்லது கிண்டி காமராஜர் நினைவிடம் அருகிலோ அமைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

அதற்கு கருணாநிதி, திமுக தேர்தல் அறிக்கையில் சிவாஜிக்கு மணிமண்டபம், சிலைஅமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதிப்படி மிகச் சிறந்தநிடிகரான சிவாஜிக்கு விரைவில் மணிமண்டபம், சிலை அமைக்கப்படும் என்றுஉறுதியளித்ததாக சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் திருவாரூர் சென்ற கருணாநிதி வழியில் பாண்டிச்சேரிக்கும் சென்றார்.அங்கு கருவடிக்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை அவர்பார்வையிட்டார்.

அந்தச் சிலை சிறப்பாக உள்ளதாகக் கூறிய, தமிழகத்திலும் அதே போல சிலையைஅமைக்கலாம் என அதிகாரிகளிடம் யோசனை தெரிவித்தார்.

மேலும் பாண்டிச்சேரி மாநில திமுக பொறுப்பாளர் ஜானகிராமனிடம், இந்தச்சிலையை படம் எடுத்து அனுப்பி வைக்குமாறு கூறிய கருணாநிதி, சிலையைவடித்தவரின் விவரத்தையும் அனுப்ப உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+