ஒரே நாளில் 100 அகதிகள் தமிழகம் வந்தனர்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து இன்று ஒரே நாளில் 100 தமிழர்கள் அகதிகளாக தமிழகம்வந்துள்ளனர்.
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. தமிழர்பகுதிகளில் இலங்கை ராணுவம் தாக்குதலில் இறங்கியுள்ளது. தினசரி நடக்கும்தாக்குதலால் தமிழர்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறி தமிழகத்திற்குஅகதிகளாக அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.இன்று ஒரே நாளில் மட்டும் 100 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி மற்றும்பாம்பனுக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் திரிகோணமலை, பேசாலை,மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களில் 34 பேர் பெண்கள். அனைவரிடமும் கடலோரக் காவல் படையினர்மற்றும் உளவுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications