பாண்டி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வராக ரங்கசாமி மீண்டும் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர்லெப்டினண்ட் ஜெனரல் லகேரா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கடந்த முறை முதல்வராக இருந்த ரங்கசாமி, இம்முறை காங்கிரஸ்-திமுக-பாமக கூட்டணியின் சார்பில்இரண்டாவது முறையாக முதல்வராகியுள்ளார்.இந்தக் கூட்டணி மொத்தமுள்ள 30 இடங்களில் 20 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மேலும் 3 சுயேச்சைகளும்ரங்கசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்று காலை ஆளுநர் மாளிகை முன் பொது மக்கள் முன்னிலையில் ரங்கசாமி முதல்வராகப்பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணிக்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
எளிமைக்குப் பேர் போன ரங்கசாமி, நேர்மையான அரசியல்வாதியாவார். இவர் திருமணமும் செய்துகொள்ளவில்லை. பெரும்பாலும் அரசு காரை தவிர்த்துவிடும் ரங்கசாமி தனது யமஹா பைக்கில் தான்பாண்டிச்சேரியை சுற்றி வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளத்திலும் அரசு பதவியேற்பு:
அதே போல கேரளத்திலும் அச்சுதானந்தன் தலைமையில் இடதுசாரிக் கூட்டணி அரசு இன்று பதவியேற்றுக்கொண்டது.












Click it and Unblock the Notifications