ஆவுடையப்பன், துரைசாமி போட்டியின்றி தேர்வு
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகராக ஆவுடையப்பனும், துணை சபாநாயகராகவி.பி.துரைசாமியும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட இன்று பிற்பகல் 12மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சபாநாயகர்பதவிக்கு ஆவுடையப்பன் பெயரையும், துணை சபாநாயகர் பதவிக்கு வி.பி.துரைசாமிபெயரையும் திமுக அறிவித்திருந்தது.இருவரும் இன்று காலை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். பிற்பகல் 12 மணிகெடு முடிவடைந்தபோது, இருவரையும் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல்செய்யவில்லை. இதையடுத்து இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
சபாநாயகர்களாகும் தென் மாவட்ட விஐபிக்கள்:
தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே கடந்த பல வருடங்களாக சட்டசபைசபாநாயகர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நெல்லைமாவட்டத்திலிருந்து 4வது சபாநாயகராக ஆவுடையப்பன் தேர்வு பெறவுள்ளார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில்சபாநாயகர் பதவியை வகித்தவர்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவேஉள்ளனர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அமைந்த திமுக ஆட்சியில் மதுரையைச் சேர்ந்ததமிழ்க்குடிமகன் சபாநாயகராக்கப்பட்டார்.
அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். மதுரை மாவட்டம்சேடப்பட்டியைச் சேர்ந்த சேடப்பட்டி முத்தையா சபாநாயகர் ஆனார்.
மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தபோது மதுரையைச் சேர்ந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சபாநாயகராக அமர்த்தப்பட்டார்.
பின்னர் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தபோது சபாநாயகர் ஆனவர் காளிமுத்து.இவரும் மதுரைக்காரர்தான். இப்படி மதுரையைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து நான்குமுறை சபாநாயகர் பதவியை அலங்கரித்து வந்தனர்.
இந் நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தஆவுடையப்பன் சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆவுடையப்பன்சிறந்த வழக்கறிஞர், முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியனிடம் ஜூனியராகபணியாற்றியுள்ளார்.
நெல்லை மாவட்டத்திலிருந்து சபாநாயகர் பதவிக்கு வரும் நான்காவது நபர்ஆவுடையப்பன். தொடர்பான செய்திகள் செல்லப்பாண்டியன், சி.பா.ஆதித்தனார்,பி.எச்.பாண்டியன் ஆகியோர் சபாநாயகர்களாக இருந்துள்ளனர்.
ஆவுடையப்பன் தனது பட்டப்படிப்பை திருநெல்வேலி ம.தி.த. இந்துக் கல்லூரியில்முடித்தவர். பின்னர் சட்டப் படிப்பை சென்னையில் முடித்தார். திமுக மாணவர் அணிசெயலாளர் பதவி முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்ட திமுகசெயலாளராக கடந்த 1992ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.
1989ம் ஆண்டு சேரன்மாதேவியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1996ம்ஆண்டு அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001ல்அம்பாசத்திரத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தற்போதைய தேர்தலில் மீண்டும்அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications