ஆப்கானில் தலிபான் தாக்குதல்- 53 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானில்தானில் தாலிபான்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்கத் தாக்குதலையடுத்து ஒமரும் பின்லேடனும் விரட்டப்பட்டனர். தலிபான்களும் ஒடுக்கப்பட்டனர்.ஆனால், சமீப காலமாக அவர்கள் மீண்டும் ஒன்று திரள ஆரம்பித்துள்ளனர்.கடத்தல், வழிப்பறி ஆகியவற்றிலும் போலீசார் மீது தாக்குதலிலும் ஈடுபட்டு வரும் தலிபான்கள் இப்போதுஆப்கானிஸ்தானின் முக்கிய நகரைத் தாக்கியுள்ளனர்.
தெற்கு ஆப்கானில் உள்ள ஹெல்மண்ட் என்ற நகரின் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்துபோலீசாரும் பாதுகாப்புப் படையினரும் திருப்பித் தாக்கினர். நீண்ட நேரம் நடந்த இந்த மோதலில் 40தலிபான்களும் 13 போலீசாரும் கொல்லப்பட்டுவிட்டனர்.
முன்னதாக மொஸா காலா என்ற நகரின் மீதும் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆப்கானிஸ்தானில் இன்னும் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் உள்ளன. ஆப்கான் ராணுவத்துக்கு பயிற்சி அளித்துவருவதோடு கண்காணிப்புப் பணிகளிலும் இந்தப் படைகள் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications