ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. மீண்டும் கலைஞர் நகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக ஆட்சி பதவியேற்றுள்ள நிலையில், சென்னை நகர பேருந்துகளின் வழித் தடபெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்), அண்ணா நிகர். இந்த இரண்டு பெயர்களும்தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பதைக் காணலாம். சென்னையிலும் இந்தநகர்கள் இருக்கின்றன, மதுரையிலும் பிரபலமாக உள்ளன.

கோவையிலும் உள்ளன, திருச்சியிலும் உள்ளன. இப்படி முக்கிய நகரங்கள்அனைத்திலும் இந்தப் பெயரில் பிரபல ஏரியாக்கள் உள்ளன.

ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் கே.கே.நகர் என்றபெயர்தான் படாதபாடு படும். குறிப்பாக பேருந்துகளில் உள்ள பெயர்ப் பலகைகள்ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் மாற்றத்திற்கு ஆளாகி சித்திரவதைப்படும்.

இப்போதும் அது நடந்து வருகிறது. திமுக ஆட்சிப் பீடத்தில் ஏறியுள்ளதால், சென்னைமாநகர பேருந்துகளில் கே.கே.நகர் என்று எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகைகள்அனைத்தும் கலைஞர் நகர் என்று மாற்றி எழுதப்பட்டுள்ளன.

இதனால் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. கலைஞர் நகர் என்று புதிதாகஉருவாகியுள்ளதோ என்று மக்கள் குழம்பியுள்ளனர். ஆனால் கே.கே.நகர்தான், ஏறுங்கஎன்று நடத்துனர்கள் விளக்கம் தந்து பயணிகளை ஏற்றி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் கேட்டபோது,

கே.கே.நகர் மட்டுமல்லாது, சுருக்கப்பட்ட மற்ற பெயர்களும் விரைவில்மாற்றப்படவுள்ளன. எம்.கே.பி. நகர் என்று மாற்றப்பட்ட மகாகவி பாரதிதாசன் நகர்,கே.கே.டி.நகர் என்று மாற்றப்பட்ட கவியரசு கண்ணதாசன் நகர், தி.நகர் என்றுமாற்றப்பட்ட தியாகராய நகர் என அனைத்து பெயர்களும் முழுமையாக பெயர்ப்பலகைகளில் இடம்பெற வேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படியே கே.கே.நகர் என்ற பெயர் கலைஞர் நகர் என மாற்றப்பட்டுள்ளதுஎன்றனர்.

முதன் முதலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது சென்னையின் ஒரு பகுதியானமேற்கு முகப்பேர் என்ற பெயரை ஜெ.ஜெ.நகர் மேற்கு என்று மாற்றினார்.

அதேபோல புதிதாக வி (V) சர்வீஸ் என்ற பேருந்து சேவையும் தொடங்கப்பட்டது.இரட்டை இலையை ஞாபகப்படுத்துவதற்காக வி சர்வீஸை அதிமுக அரசுஅறிமுகப்படுத்தியது.

பின்னர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ஜெ.ஜெ.நகர் என்ற பெயர், முகப்பேர்என பழைய பெயருக்கு மாறியது. அதன் பின்னர் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்குவந்தபோது முகப்பேர் மீண்டும் ஜெ. ஜெ. நகர் என்று ஆனது.

அத்துடன் பேருந்துகளில் ஜெ (J) சர்வீஸ் என்ற சேவை புதிதாக தொடங்கப்பட்டது.ஜெயலலிதா என்ற பெயரை குறிக்கும் வகையிலான சர்வீஸ் இது என்பதை விளக்கவேண்டியதில்லை.

எம்.ஜி.ஆர். தொண்டர்கள் மனமுடைந்து விடக் கூடாதே என்பதற்காக ஆர்சேவையையும் கூடவே தொடங்கியது அதிமுக அரசு.

இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் பெயர்கள் மீண்டும் மாறத்தொடங்கியுள்ளன. ஆட்சிகள் மாறுவது போல பெயர்களும் மாறி வருவது மக்களைமண்டை காய வைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+