சட்டசபை காங். தலைவராக சுதர்சனம் தேர்வு
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக தற்காலிக சபாநாயகராக பணியாற்றியடி.சுதர்சனம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவலை தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லிதெரிவித்துள்ளார்.முன்னதாக தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் குழப்பம் நிலவியதால், தலை யார்என்று தெரியாமலேயே இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குச் சென்றனர்.
34 இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற கட்சித் தலைவர்தேர்வு தாமதாகி வந்தது. மற்ற கட்சிகள் எல்லாம் தலைவரைத் தேர்ந்தெடுத்து விட்டநிலையில் காங்கிரஸ் கட்சி தேர்வை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.
இன்று காலை 7 மணிக்கு தலைவர் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தலைவர் பதவிக்கு ஏகப்பட்ட பேர் போட்டி போட்டதால் பெரும் குழப்பம் நிலவிவந்தது. இந்தப் பின்னணியில், இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் புதியஎம்.எல்.ஏக்களின் கூட்டம் நடந்தது.
இதில் வீரப்ப மொய்லி, சாந்தாராம் நாயக் ஆகிய மேலிடப் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். ஏழே முக்கால் மணிக்கு தொடங்கிய கூட்டத்தில், தலைவர் யார் என்பதுகுறித்து ஆலோசனை தொடங்கியது.
முன்னாள் தலைவர் யசோதா, பீட்டர் அல்போன்ஸ், தற்காலிக சபாநாயகர் சுதர்சனம்,வேலூர் ஞானசேகரன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
தலைவர் பதவியை தங்களுக்கே தர வேண்டும் என்று நான்கு பேரும் வாதிட்டனர்.ஒருமித்த கருத்துக்கு இதனால் வர முடியவில்லை. இவர்கள் தவிர குமரி அனந்தன்தம்பியான வசந்தகுமாரும் தலைவர் பதவியை கேட்டுள்ளார்.
ஒருத்தருக்கொருத்தர் சளைக்காமல் தங்களது வாதத்தில் பிடிவாதமாக இருந்ததால்,முடிவுக்கு வர முடியவில்லை. இந் நிலையில் சுதர்சனம் திடீரென கூட்டத்திலிருந்துகிளம்பிச் சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் சட்டசபையில் புதிய சபாநாயகர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இருப்பதால்அதுதொடர்பாக அவல் கிளம்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. இதையடுத்தே பரபரப்புஅடங்கியது.
மற்ற பதவிகளுக்கும் இதேபோல அடிதடி காணப்பட்டது. இறுதி வரை ஒரு முடிவும்எடுக்கப்படாமல் ஆளாளுக்குப் பேசிக் கொண்டே இருந்தனர். கடைசி வரை முடிவுஏதும் தெரியாததால், நிர்வாகிகள் தேர்வை பிறகு வைத்துக் கொள்ளது என முடிவுசெய்யப்பட்டது.
பின்னர் வீரப்ப மொய்லி எழுந்து, அனைவரது கருத்துக்களும் மேலிடத்தில்தெரிவிக்கப்படும். மேலிடத்தின் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர்என்றார். அத்துடன் கூட்டம் முடிந்தது.
தலைவர் யார் என்றே தெரியாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புலம்பியபடியேசட்டசபைக்கு கிளம்பிச் சென்றனர்.
எம்எல்ஏக்கள் எல்லாம் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்திற்குப் பின் வீரப்ப மொய்லிசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
கட்சி மேலிடத்திடம் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் சட்டமன்றக் கட்சித்தலைவராக டி.சுதர்சனம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலத் தலைவர், சட்டமன்றகாங்கிரஸ் தலைவர் ஆகியோருடன் ஆலோசித்த பின்னர் துணைத் தலைவர்,செயலாளர், கொறடா உள்ளிட்ட பிற நிர்வாகிகள் முடிவு செய்யப்பட்டு ஒரு வாரத்தில்அறிவிக்கப்படுவர் என்றார்.
இ.கம்யூ சட்டமன்ற தலைவர்:
இதற்கிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராகசிவபுண்ணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணைத் தலைவராக குணசேகர், கொறடாவாக உலகநாதன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications