கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்பட 29 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் கொடி கட்டிப் பறந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்வாரிய செயலாளர் ஷீலா பிரியா பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சிறப்புஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலாளர் செல்லமுத்து வீட்டு வசதிமற்றும் புறநகர் மேம்பாட்டு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தீபேந்திரநாத் சாரங்கி போக்குவரத்துத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.தீனபந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திரமெளலி தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கற்பூர சுந்தரபாண்டியன் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய கலெக்டர்கள்:ஜெயா - சென்னை மாவட்ட ஆட்சியர்
பிரதீப் யாதவ் - காஞ்சிபுரம்
ஆசிஷ் வாச்சானி - திருச்சி
எம்.ஏ.சித்திக் - சிவகங்கை
ஜி.சுந்தரமூர்த்தி - நாமக்கல்
ஆர்.வாசுகி - திண்டுக்கல்
ஆசிஷ் சாட்டர்ஜி - விழுப்புரம்
மதிவாணன் - சேலம்
தர்மேந்திர பிரதாப் யாதவ் - வேலூர்
பழனியாண்டி - தூத்துக்குடி
ஜவஹர் - விருதுநகர்
முத்துச்சாமி - ராமநாதபுரம்
உதயசந்திரன் - மதுரை
நீரஜ் மிட்டல் -கோவை












Click it and Unblock the Notifications